பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

ராக இருந்த திருவாளர் சி. ஆர். பேன்ஸ் என்பாரும், தண்டலராக இருந்த திருவாளர் ஆர். டி. பார்க்கர் என்பாரும், கோடைக்கானலின் உச்சியில், சமவெளிகளைப் பார்த்தாற் போன்று கோடைக் காலக் குளிர்மனைகளை எழுப்பினர். இப்போது உள்ள ‘பாம்பாறு மனை' (Pambar House) க்கும், 'ரோசனீத்' (Roseneath) திற்கும் இடைப்பட்ட இடத்திலேயே அவைகள் கட்டப்பட்டன. அலுவலகக் குறிப்புகளில் காணப்படும் மனை அமைப்பு (House plans) களை வைத்துக்கொண்டு பார்த்தால், திருவாளர் பார்க்கர் அமைத்த மனை, இப்பொழுது பாம்பாறு மனை அமைந்திருக்கும் இடத்திலேயே இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. திருவாளர் பேன்ஸ் கட்டிய மனை பாம்பாறு மனைக்கு அடுத்தாற் போல், கிழக்கில் அமைந்துள்ளது. இப்போது அது ரோமன் கத்தோலிக்க சமயத்தாருக்கு உரிமையுடையதாக உள்ளது. திருவாளர் கிளார்க் கட்டிய மனை இப்போதுள்ள 'ரோசனீத் 'தின் ஒரு பகுதியாகும்.

•ரோசனீத்' என்ற இக் கட்டிடம், மற்றவைகளை விட வரலாற்றுச் சிறப்புப் பெற்றது என்று கூறலாம். திராவிட மொழிகளை ஆராய்ந்து, ஒப்புயர்வற்ற ஒப்பிலக்கணத்தை (Comparative grammar) எழுதிய கால்டுவெல் பாதிரியார் இம் மனையில் தான் வாழ்ந்தார். அவர் எழுதிய ஒப்பிலக்கணம் திராவிட மொழியாராய்ச்சித் துறைக்கு வழி வகுத்ததோடல்லாமல், தமிழ் மொழி ஆரியத்தினின்றும் முற்றிலும் வேறுபட்ட உயர்தனிச் செம்மொழி என்ற உண்மையையும் உலகிற்கு உணர்த்தியது. கால்டுவெல் பாதிரியார் தம் இறுதி நாட்களை இம் மனையிலேயே கழித்து இயற்கை எய்தினார். கேப்டன் டபிள்யூ. எச். ஆர்ஸ்ஸி என்ற ஒரு பொறியியல் வல்லுநர், பேன்ஸ், கிளார்க் ஆகிய இருவரின் மனைகளுக்கிடையே ஒரு கட்டிடத்தை எழுப்பினார். அடுத்தாற்போல் அமெரிக்கன் மிஷனைச்