பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

லிருந்து புறப்பட்டுக் குதிரைப் பாதையின் வழியாகப் பழனிமலையுச்சியை அடைந்து, கோடைக்கானலைப் பார்வை யிட்டார். (இவர் வருகையிலிருந்தே இந்நகர், அரசியற் குறிப்பேடுகளில் கோடைக்கானல் என்று குறிப்பிடப்படுகிறது) பழனி மலையைப்பற்றி அவர் கொண்ட கருத்துக்களை அழகிய ஒரு குறிப்பு நூலாக எழுதியுள்ளார். திருவாளர் கிளார்க்கிற்கு உரிமையாக இருந்த ரோசனீத், மனையிலேயே இவர் தங்கி யிருந்தார். கி. பி. 1871-ஆம் ஆண்டு திருவாளர் நேப்பியர் பிரபு இங்கு வந்திருந்தார். இப்பொழுது கோடைக் கானலில் 'நேப்பியர் வில்லா' என்ற ஒரு மனை உள்ளது. நேப்பியர் பிரபு அவ்விடத்தில் சிறிது நேரம் நின்று சென்றதால், அம்மனை அப்பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள்.

கி. பி. 1860-ஆம் ஆண்டு திருவாளர் வெர்ஹென்றிலிவெஞ் மதுரை மாவட்டத் தண்டலராக அமர்த்தப்பட்டார். 1867 வரை அப்பணியில் இருந்து விட்டு, ஓய்வு பெற்றவராகக் கோடைக்கானலில் குடிப்புகுந்தார். கி. பி. 1885-ஆம் ஆண்டு சென்னையில் உயிர் நீத்தார். இறப்பதற்குச் சிலவாரங்கள் முன் வரையில் கோடைக்கானலிலுள்ள 'பாம்பாறு மனை' யிலேயே வாழ்ந்து வந்தார். கோடைக்கானலில் அவர் வாழத் தொடங்கியதும், ஆங்கில அரசியலாரால் பிரபு நிலை (Baronetcy) க்கு உயர்த்தப்பட்டார். அவர் மாவட்டத் தண்டலராக இருந்த போதும், ஓய்வுபெற்று இங்குத் தங்கிய போதும், கோடைக்கானலின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உழைத்தார். கோக்கர் நடை வெளிக்குச் சற்றுமேல் அவருடைய சமாதி அமைந்துள்ளது. அதில் நாட்டப்பட்டுள்ள சிலுவையில் 'கோடைக்கானலின் முன்னேற்றத்தின் பெரும் பகுதி இவரையே சாரும்' என்று எழுதப்பட்டுள்ளது. முதலிலேயே குறிப்பிட்டது போல், கோடைக்கானல் ஏரி இவரது முழு முயற்சியாலும், கைப்பொருளாலும்