பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

கால்டுவெல் பாதிரியாரின் பெயருக்குக் கி. பி. 1883ஆம் ஆண்டு அரசியலாரால் நிலம் வழங்கப்பட்டது. அதே ஆண்டில் கோடைக்கானல் வட்டத் தலைவ (Tahsildar) ரின் அலுவலகம் அமைப்பதற்கு அரசியலாரிடமிருந்து அனுமதியும் கிடைத்தது. செண்பகனூரிலிருந்து செல்லும் மலைவழிப் பாதைக் கருகில் ஐரோப்பியருக்குரிய இடுகாடு ஒன்று அமைந்துள்ளது. கோடைக்கானலுக்குள் நுழைந்ததும் இது நம் கண்களில் படும். இது கி. பி. 1900-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஒவ்வொரு சமயத்தார்க்கும் தனித் தனிப் பிரிவு இதில் உண்டு.

கோடைக்கானல், முன்னாளில் வில்பட்டியின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. கி. பி. 1899-ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் இங்கு நகராட்சி மன்றம் (Municipality) நிறுவப்பட்டது. சென்னை மாநிலத்திலேயே மிகவும் சிறிய நகராட்சி மன்றம் இதுதான். மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களே இங்கு வாழ்கின்றனர். முதன் முதலாக இந்நகராட்சி மன்றத்தில் 12 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள் யாரும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களல்லர். முன்பெல்லாம், இந்நகரில் வாழ்வோருக்குத் தேவையான குடிநீர், கிணறுகளிலிருந்தும், அருவிகளிலிருந்தும் பெறப்பட்டது. கி. பி. 1902-ஆம் ஆண்டு குடிநீர் வசதிக்கான திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. அத்திட்டத்தின்படி பாம்பாற்றில், மோகினி வீழ்ச்சிக்குமேல் 370 கெஜ தூரத்தில் ஓர் அணைகட்டி நீரைத் தேக்கி, குழாய்களின் மூலம் அந் நீரை நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்காக ரூ 43,000 செலவிடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது. பிறகு, இந் நீர்த்தேக்கம் சுண்ணாம்புக் கலவையால் உறுதியாகக் கட்டப்பட வேண்டு மென்று முடிவு செய்யப்பட்டதால் இத்திட்டத்தின் செலவு ரூ 62,250 க்கு உயர்த்தப் பட்டது. நகராட்சி மன்றம் பூராச் செலவையும் ஏற்றுக்