பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

245

வண்டி, செண்பகனூர் அஞ்சல் நிலையத்திற்கு அருகில் நின்றால், அருகிலுள்ள இக்கல்லூரியின் வாயில் தென்படும். கோக்கர் நடைவெளியில் சென்றோமானால் இக்கல்லூரியின் மணியொலி நம் காதில் மோதும். கழுத்திலிருந்து கால்வரை நீண்ட ஆடை உடுத்துக் கொண்டு, இடுப்பில் செந்நிறப்பட்டை அணிந்து கொண்டு, கையில் புத்தகமோ, மாதிரிப்பெட்டியோ (Specimen-case) தாங்கிய வண்ணம் பாதிரி நடை வெளி (Priest's walk) யிலும், கோடைக்கானலின் இயற்கையழகு சொரியும் எல்லா இடங்களிலும் இம் மாணவர்களின் கூட்டத்தைக் காணலாம். அக் கல்லூரிக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. அவர்கள் கல்விமுறை, வேலைத் திட்டம் ஆகியவை பற்றி யாருக்கும் தெரியாது.

இடைக்கலையோ (Intermediate), அதைவிட உயர்ந்த கல்வியோ கற்ற மாணவர்களே இங்குச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இங்கு எட்டாண்டுக்கல்வி எல்லாருக்கும் பயிற்றப்படுகின்றது. முதல் இரண்டாண்டு, சமயவாழ்வில் ஆழ்ந்த பற்றுக் கொள்ளும் வகையில் மாணவர்கள் பயிற்றப்படுகிறார்கள். பிறகு மூன்றாண்டுகள் இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் அறிவு பெறுகிறார்கள். பல தாய்மொழிகளைப் பேசும் மாணவர்கள் இங்குக் கூடுவதால் பொதுவாக ஆங்கிலமும், இலத்தீனும் பேச்சு மொழியாகவும் கற்பிக்கும் மொழியாகவும் பயன்படுகின்றன. கடைசி மூன்றாண்டுகளும் தத்துவ ஆராய்ச்சியிலே கழிகின்றன, கிரேக்க ரோம நாட்டுப் பெரியார்கள் அருளிச் செய்த பழமையான தத்துவங்களும், இந்திய நாட்டுத் தத்துவங்களும், மேலை நாட்டுத் தத்துவங்களும் தெளிவாகக் கற்பிக்கப்படுகின்றன. கல்லூரியில் வரலாறு படித்தவர்கட்கு இங்கு அறிவியலும் (Science), அறிவியல் படித்தவர்கட்கு வரலாறும் கற்பிக்கப் படுகின்றன. இவ்வாறு எட்டாண்டுக் கல்வி முற்றுப்