பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

பெற்றதும், அம்மாணவர்கள் பூனாவிற்கோ, குர்சியாங்கிற்கோ செல்ல வேண்டும். அங்கு, நான்காண்டுச் சமயக் கல்வியும், பாதிரித் தொழிலுக்கேற்ற ஓராண்டுப் பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன, அஞ்சல் நிலையத்திற்கருகில் இக்கல்லூரியினால் நடத்தப்படும் பொருட்காட்சிசாலை ஒன்றுள்ளது. தோண்டி யெடுக்கப்பட்ட புதைபொருள்களும் பழனி மலையிலுள்ள தாவர வகைகளும், விலங்குகளும், பலவகையான பாம்புகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. மண்ணில் மூழ்கிய புதைபொருள்களைத் தேடியெடுத்து ஆராய்வதில், இக்கல்லூரிப் பேராசிரியர்கள் பலர் பேரூக்கும் காட்டினர்; காட்டிவருகின்றனர்.

ஹைகிளெர்க் பள்ளி :

பல ஆண்டுகள் திட்டமிடப்பட்டுக் கோடைக்கானலில் 'ஹைகிளெர்க் பள்ளி' கி. பி. 1901-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இப்பள்ளி துவக்கப்படுவதற்கு முன் 'ஹைகிளெர்க் பள்ளி' (Highclerc boarding School) என்ற ஒரு நிறுவனம் கோடைக்கானலில் இருந்தது. கோடைமாதங்களில் இங்குத் தங்க வரும் அமெரிக்க, ஆங்கிலேய மக்களின் குழந்தைகள் இப்பள்ளிவிடுதியில் தங்கிப் படித்தனர். அப்பொழுது இந்நிறுவனத்தைப் 'பாதிரிமாரின் குழந்தைகள் பயிலும் கோடைக் கானல் பள்ளி' (The Kodaikanal School for Missio naries children) என்றும், 'கோடைப்பள்ளி' என்றும், 'ஹைகிளெர்க், என்றும் அழைத்தனர். முதன் முதலாகப் பதின்மூன்று மாணவர்களே இப்பள்ளியில் சேர்ந்தனர். திருமதி எம். எல். எட்டி என்ற அமெரிக்க மாது, தன் மகனான ஷெர்வுட் எட்டியைக் காண இந்தியா வந்தார். கோடைக்கானல் மக்கள் அவரை இப்பள்ளியின் முதல்வராகப் பணி ஏற்குமாறு வேண்டினார்கள். அந்த அம்மையாரும், பொறுப்பேற்றார். தாய்மையுள்ளம் கொண்ட அவ்வம்மையார் மாணவர்