பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

கன் மிஷனைச் சார்ந்த கிருத்தவரின் குழந்தைகள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், இலங்கை, அரேபியா, பாரசீகம் சியாம் முதலிய அண்டை நாடுகளிலிருந்தும் இங்கு வந்து கல்வி பயில்கின்றனர். ஓர் இரட்டைமாடிக் கட்டிடமும், வேறுபல கட்டிடங்களும், இப்பள்ளிக்காகக் கட்டப்பட்டன. பார்டன் (Barton), ஏர்லி (Airlie) முதலிய இடங்களும் இப்பள்ளிக்காக வாங்கப்பட்டன. பெண்டர்லாச்( Benderloch) என்ற இடம் பள்ளித்தலைவர் தங்குவதற்காக வாங்கப்பட்டது. வில்லிஸ்டன் (Williston), லிட்டில் வில்லி (Little Willie) என்ற இடங்கள் ஆசிரியர்களின் குடியிருப்புகளுக்காக வாங்கப்பட்டன. 'வின்ஸ்டன்' (Winston) என்ற இடம் பள்ளிக்குரிய இலவச மருத்துவமனையாகப் பயன்படுகிறது. கி. பி. 1932-ஆம் ஆண்டு இது ஓர் உயர் நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது. 'இங்கு நடத்தப்படும் இறுதித் தேர்வு மெட்ரிகுலேஷனுக்கு ஒப்பானது. இதில் கல்வி கற்று வெளியேறும் மாணவர்கள் அமெரிக்கா, கானடா நாட்டுக் கல்லூரி வகுப்புக்களில் சேர்த்துக்கொள்ளப் படுகின்றனர். இங்குப் பயிலும் மாணவர்கள் சீனியர் கேம்பிரிட்ஜ்' தேர்விலும் கலந்துகொண்டு நல்ல வெற்றியடைகின்றனர். ஏரிக்கருகில், இப்பள்ளிக்காக ஒரு பரந்த விளையாடுமிடம் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் அலெக்ஸ், திருமதி அலெக்ஸ், எஸ். வில்சன், குமாரி ப்ரிவாஸ்ட், திருவாளர் கார்ல், திருமதி கார்ல், டபிள்யூ ஃபெல்ஸ் ஆகியோர், நீண்ட நாள் பள்ளிப்பொறுப்பாளர்களாகப் பணியாற்றினர். பொதுமக்களிடத்தில் பணம் திரட்டி, திருமதி மார்கரட் எட்டியின் நினைவுச் சின்னமாக இப்பள்ளியில் ஒரு கோவிலைக் கட்டியுள்ளனர்.

பிரசெண்டேஷன் கான்வென்ட் :

கோடைக்கானலிலே குறிப்பிடத்தக்க மற்றொரு பள்ளி, 'பிரசெண்டேசன் கான்வெண்ட்' என்ற