பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

249

பெண்கள் உயர் நிலைப்பள்ளியாகும். சென்னைப் பிரசெண்டேசன் திருச்சபையைச் சார்ந்த சேவியர் தாயார் (Rev. Mother Xavier) அவர்களும் வேறு சில கன்னியரும் 1914-ஆம் ஆண்டு கோடைக்கானலுக்கு வந்திருந்தனர். அவ்வாண்டு 'ஹில்சைட்' (Hill Side) என்ற இடத்தில் தங்கினர். கி. பி. 1915-ஆம் ஆண்டு 'கென்மூர்' (Kenmure) என்ற இடத்தில் தங்கினர். அப்பொழுது அவர்களுடன் சில குழந்தைகளும் தங்கியிருந்தனர். அவ்வாண்டு எல்லோரும் சென்ற பிறகு, சேவியர் தாயாரும், இக்னேசியஸ் தாயாரும், ஃபோர் வீரி என்ற இடத்தில் தங்கி, ஒரு பள்ளி நிறுவுவதற்கு ஏற்ற இடத்தைத் தேடினர். கிளென் வீழ்ச்சிக்கு அருகில் அமைந்திருந்த மலையுச்சியில் (முன்பு வானாய்வுக்கூடம் இருந்த இடம்) பள்ளியை நிறுவுவது என்று முடிவு செய்தனர். அப்பள்ளியை அமைப்பதற்கு வேண்டிய பொருளாதாரத்தைப் பற்றித் திருவாளர் ஈ. ஆர். லோகன் என்பாருடன் ஆலோசனை நடத்தினர்.

கி. பி. 1916-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் பிரசெண்டேசன் திருச்சபையைச் சார்ந்த கன்னியர்கள், 'ஹில் சைட்' என்ற இடத்திலேயே 17 மாணவியர்களைக் கொண்டு இப்பள்ளியைத் துவக்கினர். 1916-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 16-ஆம் நாள் இப்போதுள்ள பள்ளிக் கட்டிடத்திற்குக் கல் நாட்டு விழா நடத்தப்பட்டது. மரங்களும் நடப்பட்டன. கட்டிட வேலை முடிந்ததும் கி. பி. 1917-ஆம் ஆண்டு ஃபெப்ருவரித் திங்களில், பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. பள்ளியில் ஒரு கோவிலும் அமைக்கப்பட்டது. அக்கோவில் காலையில் தொழுகைக்குரிய இடமாகவும், மாலையில் பள்ளியாகவும் பயன்படுத்தப்பட்டது. முதலில் மிகவும் எளிய முறையிலேயே இப் பள்ளி தொடங்கியது. இங்குப் பணிபுரிந்த கன்னிமார்