பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

251

கோஹென் நினைவுப் பள்ளி :

கி. பி. 1912-ஆம் ஆண்டு, கோடைக்கானலில் லாச் எண்டு' (Loch End) என்ற ஓர் இடத்தை, அமெரிக்க லூதரன் சமயத்தைச் சார்ந்தவர்கள், திருவாளர் டேனியல் மக்நாயர் என்ற பொறியியல் வல்லுநரிடமிருந்து விலைக்கு வாங்கினார்கள். கி. பி. 1922-ஆம் ஆண்டு, தங்கள் குழந்தைகள் பயிலுவதற் கென்று ஒரு பள்ளியை நிறுவினார்கள். தங்கள் தந்தையர் நாடான அமெரிக்க நாட்டுக்குக் கல்வி முறையை அப்பள்ளியில் புகுத்தினர். கோடைக்காலத்தில் இங்கு வந்து தங்கியவர்களின் குழந்தைகளுக் சான பருவப்பள்ளி (Season school) யாகவே இது முதலில் துவக்கப்பட்டது. திருவாளர் பாச்மேன் என்ற ஆசிரியர் பள்ளிக்காகச் சிறிய ஒரு கட்டிடத்தைக் கட்டினார். பிறகு மாணவர்களுக்குத் தங்குமிடமும், கோவிலும் அமைத்தார். இவ்விரண்டின் கட்டிடக் கலையழகு கோடைக்கானலில் குறிப்பிடத்தக்கது, திருவாளர் புச்சானன் புதைபொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவர். பழனிமலைகளில் கி. பி. 1942-ஆம் ஆண்டு அவர் தோண்டியெடுத்த புதைபொருள்கள் செண்பகனூரிலுள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளன. இப்பள்ளியில் 8 வகுப்புக்கள் இப்பொழுது உள்ளன. திருவாளர் மியூல்லெர் என்பாரும் திருமதி ஹெக்கல் அம்மையாரும் ஆசிரியர்களாக இங்குப் பணியாற்றுகின்றனர்.

ஸ்வீடிஷ் பள்ளி :

இந்தியாவில் வாழும் ஸ்வீடிஷ் குழந்தைகள் பயில்வதற்கென்று கோடைக்கானலில் ஒரு பள்ளி உள்ளது. ஸ்வீடிஷ் குழந்தைகள் முதலில் ஹைகிளெர்க் பள்ளிக்கே அனுப்பப்பட்டனர். ஆனால் இருபதாண்டுக்கு முன் ஸ்வீடிஷ் குழந்தைகள் தனியாகப் பயில்வதற் கென்று இப்பள்ளி துவக்கப்பட்டது. இப்பள்ளியின்