பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

253

ஏழை மாணவர் பள்ளி :

கி. பி. 1919-ஆம் ஆண்டு இந்திய ஏழை மாணவர்களுக்காக ஓர் இலவசப் பள்ளி துவக்கப்பட்டது. இப்போது அது 'செயிண்ட் சேவியர் இந்திய ஏழை மாணவர் பள்ளி' என்ற பெயர் கொண்டு விளங்குகிறது. 80 மாணவர்களுக்கு இலவச உணவும் உடையும் இங்கு அளிக்கப்படுகின்றன. ரோமன் கத்தோலிக்க மாணவர்களடங்கிய ஒரு குழு இப் பள்ளியில், அமைக்கப் பட்டுள்ளது. இக் குழு , கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்த ஏழைகளுக்குத் தொண்டு புரியப் பயன்படுத்தப்படுகிறது.

அனாதைப் பள்ளி :

கி. பி. 1906-ஆம் ஆண்டு ஓர் ஆங்கிலப் பாதிரியார், 'ஆண்கள் ஆங்கிலப்பள்ளி' என்ற ஒரு பள்ளியை ஃபெர்ன்ஹில் என்ற இடத்தில் துவக்கினார். ஆனால் அப் பள்ளி சில நாட்களில் மூடப்பட்டு விட்டது. 1908-ஆம் ஆண்டு குமாரி கார் என்பவர் சில ஆங்கிலக் குழந்தைகளுக்காகச் சிறிய பள்ளியொன்றைப் பென் லொமாண்ட்' என்ற இடத்தில் (ஸ்பென்சர் கடைக்குப் பின்னால்) துவக்கினார். அதுவும் கைவிடப்பட்டது. கி. பி. 1915-ஆம் ஆண்டு , இமயமலைச் சாரலிலுள்ள 'காலிம்பாங் விடுதி' (Kalimpong Homes) யைப் போன்று, ஆங்கிலோ இந்திய அனாதைக் குழந்தைகளுக்காகக் கோடைக்கானலிலும் ஒரு விடுதியை அமைத்தற்கான ஒரு திட்டம் உருவாகியது. செண்பகனூர் தொடரில், ப்ளேக்பர்ன் ஷோலா இருந்த இடத்தில் (அடுக்கம் கணவாயின் உச்சியில்) அவ் விடுதியைக் கட்ட முடிவு செய்தனர். இதற்குள்ளாகக் கோடைக்கானலில் வாடகைக் கட்டிடம் ஒன்றில் இவ்விடுதி துவக்கப்பட்டது, ஸ்பென்சர் கடைக்கு அடுத்தாற் போல் உள்ள 'கிளெஞ்சில்' (Glengyle) என்ற இடத்தில் வயது வந்த பெண்களுக்கான ஒரு விடுதியும்,