பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20



(1) கட்டிடங்களுக்கான தூலங்களை வெட்டுதல் (2) எரிபொருளுக்கான மரங்களை வெட்டுதல் (2) கரி தயாரித்தல் (4) மூங்கில் வெட்டுதல் (5) சந்தன மரங்களை வளர்த்தல், வெட்டுதல் (6) மேய்ச்சல் நிலமாகப் பயன்படுத்தல் (7) தழை உரம் சேகரித்தல் (8) சிறுபொருள் தயாரித்தல் எனப் பலவகைகளில் சில சட்டங்களுக்கும் அமைப்புக்களுக்கும் காடுகளை உட்படுத்தி அவற்றின் பயனைக் கொண்டனர் அரசியலார்.

காடுகளில் தீப்பற்றி அழிவு நேராமலிருக்கப் பல வழிமுறைகளை மேற்கொண்டனர். தீப்பற்றுவதற்கான ஏதுக்களைக் களைந்தனர். காட்டுத் தீயணைப்புக்காக சேர்வராயன் மலைகளின் ஒரு பகுதியான சந்நியாசி மலையில் மட்டும் ரூ. 9000 செலவிட்டனர். தழை உரம் நல்ல வருவாய் அளிப்பதைக் கண்டு அதை வளர்க்க முற்பட்டனர். கால்நடைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு மேய்ச்சல் நிலங்களில் அவற்றை மேயவிட்டனர். மலைகளின் மீது நீர்ப்பாசன வசதிகளைச் செய்தனர். புதிதாகச் சந்தனக் காடுகளைத் தோற்றுவித்தனர்.

ஆனால் மறுபடியும் காட்டழிவு வேலைகள் தொடங்கின. தென்னிந்திய இரயில்வேயின் எரிபொருள் தேவைக்காகச் சேலம் மாவட்டத்தில் பல கிடங்குகள் (Coupe depots) ஏற்படுத்தப்பட்டன. இத்திருப்பணியைத் துவக்கி வைத்தவர், அப்போது சேலம் மாவட்டத் தண்டல (Collector) ராக இருந்த திருவாளர் பிரேசியர் (Mr. Brasier) என்ற துரைமகனார். இதோடு விடவில்லை அவர். “அனுமதிக்கப்பட்ட மரம் வெட்டல்” (Located fellings) என்ற புதுமுறைக்கும் ஆக்கமளித்தார். இம்முறைப்படி, அரசியலாருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கப்பமாகக் கட்டிவிட்டு அனுமதி பெற்றவர்கள், காட்டின் எப்பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று, விருப்பப்பட்ட மரங்களை