பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

ஃபெர்ன்ஹில் மனையில் ஆண்களுக்கும் இளஞ் சிறுமியர்க்குமான விடுதியோடு பள்ளி ஒன்றும் நிறுவப் பட்டன. இக் கட்டிடத்திற்குப் 'ப்ளேக்பர்ன்' என்று பெயரிட்டனர். ஆனால் இவ்வனாதைப் பள்ளி நீலகிரி மலையின் மீதுள்ள கெய்டி பள்ளத்தாக்குக்கு மாற்றப்பட்டுவிட்டது. இப்பொழுது அங்குப் பெரும் அளவில் சிறப்பாக இப் பள்ளி நடத்தப்படுகிறது.

மாண்டிசோரிப் பள்ளி :

திருமதி மாண்டிசோரி அம்மையார் கி. பி. 1942 முதல் 1944 வரை கோடைக்கானலில் தங்கி யிருந்தார். அப்பொழுது சிறு குழந்தைகளுக்கான மாண்டி சோரிப் பள்ளி ஒன்றும், மாண்டிசோரிக் கல்வி முறையைப் பயிற்றுவதற்காக ஆசிரியப் பயிற்சிப் பள்ளி ஒன்றும் அவர் நடத்தினார். பல நாட்டுச் சிறு குழந்தைகளும் அப் பள்ளியில் கல்வி பயின்றனர். 'ரோஸ் பேங்க்'கில் அப் பள்ளியிருந்தது. புகழ் பெற்ற இப் பேராசிரியரின் காலடியிலமர்ந்து சிறந்த கல்வி பெறும் வாய்ப்பை இந்திய நாட்டின் பல பகுதியிலிருந்தும் வந்த குழந்தைகள் இரண்டாண்டுகள் பெற்றனர்.

கழகங்கள்

படகுக் கழகம் :- கோடைக்கானலிலுள்ள கழகங்களில் படகுக் கழகம் குறிப்பிடத் தக்கது. ஆரம்பத்திலிருந்தே ஏரியில் படகுகள் இருந்தன. சில தோட்ட முதலாளிகள் தங்கள் சொந்த உபயோகத்துக்காகக் கீழ் ஏரிப் பாதையில் சில படகு வீடுகளை {Boat houses) அமைத்தனர். ரோமன் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் 'வெஸ்ட் வர்டு ஹோ'விற்கு அருகில் ஒரு படகு வீட்டைக் கொண்டிருந்தனர். தனிப்பட்டவர்கள், படகுகளை வாங்கிக் கோடைக்கானலுக்குக் கொண்டு வருவது அவ்வளவு எளிதாகத் தோன்றவில்லை. ஆகையினால் இக் குறையைப் போக்க கி. பி. 1890-ஆம்