பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

257

கோடைக்கானல் கழகம் :

கோடைக்கானலில் பல நாட்டு மக்களும் குடியேறத் தொடங்கியதும், மாலை நேரத்தில் இன்பமாகப் பொழுதைக் கழிப்பதற்கு ஒரு கழகம் தேவை என்பதை எல்லோரும் உணர்ந்தனர். அதன் விளைவாகவே கோடைக்கானல் கழகம் தோன்றியது. சர்வெர்லி வெஞ்ச் அவர்களும், நடுவர் கிரகாம் அவர்களும் கோடைக்கானலில் வாழ்ந்தபோது, 'பாம்பாறு மனையில்' அடிக்கடி விருந்தும், கூட்டங்களும் நடத்துவார்கள். கோடைக்கானலில் வாழ்ந்த சமய வாதிகளும், பொதுமக்களும் சேர்ந்து ஒரு கழகத்தை நிறுவ வேண்டும் என்று முடிவு செய்தனர். இப்போது இக் கழகக் கட்டிடம் அமைந்துள்ள இடம் மதுரை அமெரிக்க மிஷனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மைதான விளையாட்டுக்களும் (Out door games), குடியும் அங்கு இடம் பெறக் கூடாது என்ற நிபந்தனைகளை விதித்தனர். பொது மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுக் கழகக் கட்டிடமும், மட்டைப் பந்தாட்ட மைதானமும் அமைக்கப்பட்டன. கழகம் கி. பி. 1887-ஆம் ஆண்டு துவங்கியது. கோடைக்கானலில் மக்கள் தொகை பெருகியதும், ஒவ்வொரு சமயத்தாரும் தங்களுக்கெனத் தனியான அமைப்புகளை நிறுவிக்கொண்டனர். அதனால், இக் கழகம் கவனிப்பாரற்றுச் சிறிது காலம் கிடந்தது. கழக முன்னேற்றத்துக்காகத் தனிப்பட்டாரும், இராணுவ அதிகாரிகளும், பொருளுதவி செய்ய மறுத்துவிட்டனர். இதை யறிந்த மதுரை அமெரிக்க மிஷனைச் சார்ந்தவர்கள் மீண்டும் இக் கழகத்தின்பால் ஊக்கம் காட்டினர். கழகத்தின்மீது சுமத்தியிருந்த கட்டுப்பாடுகளையும் நீக்கினர். பிறகு இக் கழகம் நல்ல முறையில் வளர்ச்சியுற்றது. கட்டிடம் மேலும் பெரியதாகவும், வசதியுடையதாகவும் கட்டப்பட்டது. வேறு பல மட்டைப் பந்தாட்ட மைதானங்களும் தோற்றுவிக்கப்

கு.வ.-17