பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

263

பாலோர் கோடைக்கானல் பாதிரிமார்கழகத்தின் உறுப்பினர்கள்.

கோடைக்கானல் நட்புறவு இயக்கம் :

கோடைக்கானல் நட்புறவு இயக்கம் (The Kodaikanal Fellow-ship) 1927-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இது பல நாட்டு மக்களின் நட்புறவை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இது உலக நட்புறவு இயக்க (International Fellow-ship) த்தின் கிளையாகப் பணிபுரிகிறது. இவ்வியக்கத்தைத் துவக்கும் கருத்தை முதன்முதலாக வெளியிட்டவர் சென்னையில் வாழ்ந்த டாக்டர் எலியனார் மேக் டோகால் என்பவர். டாக்டர் மேனன், திருவாளர். பி. ஜி. நாராயணன் ஆகிய இருவரும் குமாரி ஸ்பென்ஸ், திருமதி பீச்சி ஆகிய இரு நங்கையரின் துணை கொண்டு 'லிட்டில் ஹேஸ்' என்ற இடத்தில் இவ்வியக்கத்தின் முதல் கூட்டத்தை நடத்தினர். பொதுவாகக் கோடைக்கானலில் வாழ்ந்த ஐரோப்பியர், இந்தியர் ஆகியோரின் நட்புறவை வளர்ப்பதற்காகவே இவ்வியக்கம் துவக்கப்பட்டது. தேநீர் விருந்துகளும், உரையாடல்களும், சொற்பொழிவுகளும் இவ்வியக்கக் கூட்டங்களில் பெரிதும் இடம்பெற்றன. திருமதி ராய்ட்ஸ், திருமதி கிளேடன் ஆகியோரின் இல்லங்களிலும், இந்தியர் கழகத்திலும், பாதிரிமார் கழகத்திலும் இவ்வியக்கக் கூட்டங்கள் அடிக்கடி நடைபெற்றன, அடிக்கடி கலாச்சாரக் கூட்டங்களும் இவ்வியக்கத்தாரால் நடத்தப்பெற்றன. மொகஞ்சதாரோ புதைபொருள் ஆராய்ச்சியைப் பற்றிப் பல அறிஞர்கள் இக் கழகத்தில் தொடர்ந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.

இந்தியப் பல்கலைக்கழக மாதர் கழகம் :

'இந்தியப் பல்கலைக்கழக மாதர் கழகம்' என்ற ஓர் அமைப்பும் இங்கு உள்ளது. இக்கிளை, கல்கத்தா