பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

வெட்டிக்கொள்ளலாம். தென்னிந்திய இரயில்வேயின் எரிபொருள் தேவை, கி. பி. 1892-ஆம் ஆண்டிலிருந்து துவங்கியது. திங்கள்தோறும் அதற்கென 200 டன் நிறையுள்ள மரங்கள் வெட்டி அனுப்பப்பட்டன. கி. பி. 1894-ஆம் ஆண்டு அந்த அளவானது, திங்களுக்கு 500 டன்களாக உயர்ந்தது. 1896-ல் 1200 டன்களும், 1899-இல் 2200 டன்களும் திங்கள்தோறும் வெட்டி அனுப்பப்பட்டன. 1906-இல் நிலக்கரி நிறையக் கிடைக்கத் தொடங்கியதும் மரக்கட்டையின் தேவை குறைந்தது. மேற்கூறிய செய்கைகளால், காடுகளின் வளர்ச்சி குறைந்தும் அழிவுகள் பெருகியுமே காணப்பட்டன. இவ்வாறு அழிந்தவை, அழிக்கப்பட்டவை போக எஞ்சியுள்ளவையே இன்று சேர்வராயன் மலைகளின் மீதுள்ள காடுகள்.

மூங்கில் :

சேலம் மாவட்டக் காடுகளில் கிடைக்கும் மூங்கில் மிகவும் பெயர் பெற்றது; பயன்மிக்கது. மூங்கிலானது, கடல் மட்டத்திற்குமேல் 1000 அடியிலிருந்து 4000 அடிவரையில் எவ்விடத்திலும் நிறையப் பயிராகும். சேர்வராயன் மலைகளின் மீதும் அளவற்ற மூங்கில்கள் விளைகின்றன. ஓடைக்கரைகளிலும், பள்ளத்தாக்குகளிலும் இது பருத்து அடர்த்தியாக வளரும்.

சந்தனம் :

சந்தனம் தமிழர் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையது ; சங்கப் புலவர்களின் பாடல் பெற்றது. வெப்ப நாடான தமிழகத்தில் வாழும் மக்கள் அதனை உடலில் பூசி, அதன் குளிர்ச்சியில் திளைத்தனர். சேர்வராயன் மலையில் சந்தன மரங்களுக்குக் குறைவில்லை. ஆனால் தேன்கனிக்கோட்டை (Denganikottah) யில் விளையும் சந்தன மரங்களைப்போல் இவை தரத்தில் உயர்ந்தவையல்ல. இவற்றைப்பற்றி