பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

ஊா; இன்பவாழ்விடம். தென்காசியிலிருந்து மேற்கே மூன்றரைக்கல் தொலைவிலுள்ளது. இது மேற்குமலைத் தொடரின் தென் கிளையின் மேல் சுமார் 550 அடி உயரத்தில் அமையப் பெற்றுள்ளது. இது குறும்பலா, திருக்குற்றாலம் முதலிய இருபத்தொரு பெயர்களால் வழங்கும். இவ்வூருக்கு அண்மையில் ஓடும் நெடுஞ் சாலைகளிலிருந்து, பல கிளைப் பாதைகள் வலை பின்னினாற்போல் அமைந்து இவ்வூரை இணைக்கின்றன. ஐரோப்பியரும் இந்திய நாட்டுச் செல்வரும் இந்நகரில் விரும்பி வாழ்கின்றனர். குறிஞ்சியழகும், குளிர் தென்றலும், நீர் வீழ்ச்சிகளும், குறும்பலாவீசர் கோவிலும், இவ்வூருக்குப் பெருஞ் சிறப்பு நல்குகின்றன. ஆண்டுக்கு இங்கு 60 அங்குல மழை பெய்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் திங்கள் வரை 'அரியங்காவுக் கணவாய்' வழியாகத் தென் மேற்குப் பருவக்காற்றினால் துரத்தப்பட்ட மேகக் கூட்டங்கள் திரள் திரளாக இங்கு வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் இச்சமயத்தில் வேறு எங்கும் மழை கிடையாது. ஆனால் குற்றாலமும் அதைச் சுற்றியுள்ள சரிவுகளும் நிறைந்த மழையைப் பெறுகின்றன. மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் வானத்தில் மிதந்து திரியும் மேகக் கூட்டங்களிடையே புகுந்து வீசும் காற்று குளிர்ச்சி பெற்று, குற்றால நகரின் வெப்ப நிலையைப் பத்து முதல் பதினைந்து டிகிரிவரை குறைத்து விடுகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கோடைக்காலத்தில் மக்கள் இங்கு வந்து திரளாகக் கூடுகின்றனர். ஜூன் முதல் செப்டம்பர்வரை, இங்கு மக்கள் மிகுதியாகத் தங்கும் சிறப்புக் காலமாக இருந்து வருகிறது.

குற்றாலமலையில் தோன்றும் சிற்றாறு {சித்திரா நதி) சம நிலத்தை அடைவதற்கு முன் பல நீர் வீழ்ச்சிகளாக விழுந்து ஒன்று கூடுகின்றது. சித்திரா நதி 200 அடி உயரத்திலுள்ள காட்டிலிருந்து கீழே விழுந்து சமவெளி