பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

இருப்பதால் இப்பெயர் பெற்றது. இதைப் பெரிய அருவி என்றும் கூறுகின்றனர். இதன் அளவு நோக்கி இப்பெயர் இடப்பட்டிருக்க வேண்டும். மிகவும் அளவில் சிறியதாக விழும் அருவி சிற்றருவி என்று அழைக்கப்படுகிறது. ஐந்தருவி என்ற மற்றொரு அருவியும் இருக்கிறது. இது ஒரே இடத்தில் ஐந்தாகப் பிரிந்து வீழ்கிறது. இவை ஐந்தும் தனித்தனியே பத்து கஜ தூரத்திலிருந்து விழுகின்றன. பொங்குமாங் கடலி லிருந்து சுமார் 2 கல் தொலைவு குறுகிய செங்குத்தான பாதையின் வழியாகப் போனால் சண்பக அருவி தென்படும். போகும் வழி நெடுக மா, பலா, கமுகு, ஏலம், கிராம்பு முதலிய மரங்கள் செழித்து வளர்ந்திருக்கும். மேலும் 2 கல் சென்றால் தேனருவியை அடையலாம். குற்றால நாதர் கோவிலுக்குத் தென் மேற்கில் 11 கல் தொலைவில் ஐந்தருவி உள்ளது. இங்குக் குளிக்கலாம்.

நீர் வீழ்ச்சி விழும் பாறையில் பல சிவலிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குளிக்கும் கட்டத்திலிருந்து சில நூறு அடி தூரத்தில், ஆற்றின் கரையில் குற்றால நாதர் கோவிலமைந்துள்ளது. விழாக் காலங்களில் இன்னிசை முழக்கோடு இவ்விறைவனை, அருகிலுள்ள தீர்த்தவாரி மண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லுகின்றனர். பிறகு நீர்வீழ்ச்சியில் இறைவனைக் குளிப்பாட்டுகின்றனர். நாள்தோறும் கோவில் குருக்கள் தான் சிவலிங்கங்களுக்குப் பூசை நடத்துகின்றார். புண்ணிய நாட்களில் சித்திரா நதி, புனித கங்கையாகக் கருதப்படுகிறது. இந் நீர்வீழ்ச்சிகளின் சிறப்பால், குற்றாலம் ஒரு புனிதமான இடமாகக் கருதப்படுகிறது, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்கள் குற்றால நாதரைத் தரிசிக்க இங்கு வந்து கூடுகின்றனர், திருக்குற்றால ஸ்தல புராணத்தில் இவ்வூர் 'திரி கூடாசலம்' (மூன்று சிகரங்களைக் கொண்ட மலை.) என்று குறிப்பிடப்படுகிறது. இங்குக் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் இறைவன் 'திரிகூடாசலபதி'