பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

முறையிட்டார். முருகனின் அருள் மொழியை மேற்கொண்டு, திருமண்ணும் துளசி மாலையும் தாங்கிய வண்ணம் குற்றாலத்திற்கு வந்தார். இவருடைய வைணவக் கோலத்தைக் கண்ட கோவில் நம்பிகள், இவரை உள்ளே அனுமதித்தனர். கோவிலுக்குள் நுழைந்த குறுமுனி திருமாலைத் தம் திருக்கரத்தால் தொட்டார். உடனே அப் படிமம் சிவபெருமானாக மாறியது. இவ்வாறு வைணவத் தலமாக இருந்த குற்றாலம் அகத்தியரால் சிவத் தலமாக மாறியது. இப் புராணக் கதையில் எந்த அளவு உண்மையிருக்கிறது என்று கூற முடியாது. ஆனால் மாற்றம் ஏற்பட்டது உண்மை தான். ஆனால் இம் மாற்றம் அரசியல் மாறுபாட்டால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். இக் கோவிலில் 15-ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன. இதன் தென்புறத்தில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட 6 அடி உயரமுள்ள சதுரத் தூண், ஒன்று நாட்டப்பட்டுள்ளது. இத் தூண் தென்காசிக் கோவிலுக்கு முன்பு நாட்டப்பட்டுள்ள தூணை உருவத்தில் ஒத்திருக்கிறது.

நீர்வீழ்ச்சிகளின் அடிவாரத்திலும் ஆற்றின் வட கரையில் கோவிலுக்கருகிலும், பிரயாணிகள் தங்குவதற் கென்று பல மண்டபங்கள் அமைந்துள்ளன. மண்டபங்களுக்கு முன்புள்ள திறந்த வெளி, தள வரிசைக் கற்களால் அமைந்தது. ஆற்றின் குறுக்கே நடை பாதையாக ஒரு பாலம் அமைந்துள்ளது. அங்குள்ள இரண்டு பெரிய மண்டபங்களும் 18- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சொக்கம்பட்டிப் போளிகர்களால் கட்டப்பட்டவை. ஒரு மண்டபம் கோவிலுக்கு எதிரில் உள்ளது. மற்றொரு மண்டபம் கொடி மரத்தோடு விளங்குகிறது. இந்த மண்டபத்தில், இதைக் கட்டிய மன்னனின் சிலையும், அவன் சகோதரனின் சிலையும், இராணுவ உடையோடு காட்சியளிக்கின்றன. குற்றால நாதர் கோவிலிலிருந்து சில நூறு கஜங்களுக்கு அப்பால் அமைந்துள்ள