பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

ஜெரேனியம் எண்ணெய் வாணிப முக்கியத்துவம் வாய்ந்தது. சேர்வராயன் மலைமீது 4500 அடிகளுக்கு மேல் இது நன்றாக வளருகிறது. இம்மலையில் சுமார் 150 ஏக்கர் நிலத்தில் ஜெரேனியம் பயிர் செய்யப்படுகிறது.

இந்திய நாட்டு மக்கள் மணப் பொருள்களைப் பண்டைக் காலத்தில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தினார்கள் என்பதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன. குறிப்பாகத் தமிழ் மக்கள் மணப் பொருள்களை மிகவும் விரும்பினர். அகில் கட்டையைப் புகைத்து அதில் கிளம்பும் மணமிக்க புகையைத் தங்கள் கூந்தலில் ஏற்றித் தமிழ் மகளிர் தம் கூந்தலை ஒப்பனை செய்தனர் என்றும், மல்லிகை, குறிஞ்சி, முல்லை முதலிய மணமிக்க மலர்களைச் சூடி இன்புற்றனரென்றும் சங்க இலக்கியங்கள் பரக்கப் பாடுகின்றன. ஆடவரும் பெண்டிரும் மார்புக்குச் சந்தனம் பூசிக்கொள்ளும் வழக்கம் பண்டைக் காலத்தில் பெரு வழக்காக இருந்தது. அகிலும் சந்தனமும், வேறு சில மணப் பொருள்களும் கிரீஸ், உரோமாபுரி, எகிப்து, அரேபியா முதலிய நாடுகளுக்குத் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டனவென்று வரலாறு கூறுகிறது. ஆனால் இன்றாே, நம் நாடு இத்துறையில் பின்னடைந்துள்ளது. மணப்பொருள் உற்பத்தி செய்யும் தொழில், ஃப்ரான்சு, இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, உருசியா முதலிய நாடுகளில் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. மணப் பொருள்களுக்கான தாவரங்கள் விளைவதற்குரிய தட்ப வெப்பநிலை நம் நாட்டில் இயற்கையாகவே அமைந்துள்ளது. குளிர்ந்த மலைச் சரிவுகளும், பள்ளத்தாக்குகளும் இங்கு நிறைய உள்ளன. ஆனால் அவைகளை நாம் இன்னும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இந்திய நாட்டில் சோப்பு முதலிய மணப் பொருள்கள் செய்வதற்கு ஆண்டுதோறும் 28,000 இராத்தல்