பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40

இலண்டன் நெறி, லீப்சிக் லூதர் நெறி, டேனியர் நெறி, ஆகிய பல்வேறு நெறியாளருக்கும் இங்கு தனித் தனிக் கோயில்களும் கட்டடங்களும் உள்ளன. ஆங்கிலிகன் நெறியாளர் கோயிலும், புனித டிரினிடி நெறியாளர் கோயிலும் ஏர்க்காட்டில் வாழ்ந்த அவ்வச்சமயத்தாரின் பொருளுதவியால் கட்டப்பட்டவை. தத்தம் கோயில்கட்குரிய தலைவர்களைத் (Chaplain) தாமே தேர்ந்தெடுத்து, சமயத் தலைவரின் இசைவோடு, அவராணையின் கீழ் அக்கோயில்களை நடத்துகின்றனர். இக் கோயில்களைச் சார்ந்துள்ள இடுகாட்டில் (Cemetary) பல குறிப்பிடத்தக்க சமாதிகள் உள்ளன. திருவாளர் சார்லஸ் பிரடெரிக் சாமியர் என்பவர் சேலத்தில் நடுவராகப் (Session’s judge) பணியாற்றி 20-4-1869-இல் உயிர் நீத்தார். அவருடைய சமாதி இங்குள்ளது. கேப்டன் எட்வர்டு ஆல்வெல் ஷார்ட் (இறப்பு: 7-12-1883) என்பாரும், சென்னை மாநிலப் படையில் உயர் மருத்துவராகப் (Surgeon general) பணியாற்றிய திரு. ஜான்ஷார்ட் என்ற புகழ்பெற்ற ஆங்கிலோ இந்தியரும் (இறப்பு: 24-4-1889) இங்கு தான் புதைக்கப்பட்டுள்ளனர்.

சேர்வராயன் மலைமீது கத்தோலிக்க நெறியாளர்க்குரிய கேந்திரங்களாக ஏர்க்காடும், பாலமடியும் விளங்குகின்றன. ‘கிளனி புனித சூசையப்பர் திருச்சபை’ யைச் (St Joseph’s of Cluny) சார்ந்த கன்னியர் 1894-ஆம் ஆண்டு ஏர்க்காட்டிற்கு வந்தனர். 1897-இல் தங்களுக்குரிய கோயில் ஒன்றை எழுப்பினர். அவர்களால் சிறந்த மகளிர் பள்ளியொன்றும் இங்கு நடத்தப்படுகிறது.

கல்விக் கூடங்கள் :

ஏர்க்காட்டிலுள்ள பள்ளிக் கூடங்களெல்லாம் கிருத்தவர்களாலேயே நடத்தப்படுகின்றன. இவை முதன் முதலில் ஏர்க்காட்டிலும் சேலத்திலும் வாழ்ந்த