பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
42

துவக்கப்பட்டது. இதிலும் ஏறக்குறைய 300 மாணவியர் கல்வி பயிலுகின்றனர். இதில் குழந்தைகளுக்கான கிண்டர் கார்டன் பள்ளியும் உள்ளது. இதில் மேலைநாட்டு இசை நடனக் கலைகளும் தொழிற்கல்வியும் கூடக் கற்றுக் கொடுக்கின்றனர்.


பிறகலைக் கூடங்கள் :

புனித மேரி திருச் சபையாரால் கிருத்தவக் கன்னியருக்காக நடத்தப்படும் இரண்டு பள்ளிகளும் உள்ளன. கோடைக் காலங்களில் கன்னியர் வந்து தங்கும் குறிஞ்சிமனையாக இவைகள் பெரிதும் விளங்குகின்றன. கிருத்தவ ஆடவர்க்குச் சமயக்கல்வி பயிற்றும் ஒரு பள்ளியும் இங்கு உள்ளது.


நாய் பங்களா :

ஏர்க் காட்டில் சிறப்பாகப் பேசப் படுவனவற்லுள் நாய் பங்களாவும் ஒன்று. பெரிய ஏரிக்கு இடதுபுறமாக நாகலூர் செல்லும் வழியில் இது உள்ளது. பாதையில் செல்லும் போதே நாய்கள் குரைக்கும் ஒலி நம்மை அச்சுறுத்தும். அப்பங்களாவின் உரிமையாளர் திருமதி. கோல்டுஸ்மித் அம்மையார். இவர் ஃபிரெஞ்சு நாட்டிலிருந்து இங்குக் குடியேறி நீண்ட காலமாக வாழ்கிறார். இவருடைய உற்றார் உறவினர் எல்லாம் நாய்களே என்று சொன்னால் கூடப் பொருந்தும். பூனையின் பருமனுள்ள நாயிலிருந்து சிறுத்தை அளவுள்ள நாய்கள் வரையில் இங்கிருக்கின்றன. நான் இவரைப் பார்க்கச் சென்றிருந்தபோது இவருடைய படுக்கை அறை மஞ்சத்தில் உரிமையோடு ஓர் ஆப்கானியச் சடைநாய் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. இவருடைய சாய்வு நாற்காலியில் ஒரு சீன நாய் அரசனைப் போல் வீற்றிருந்தது. அல்சேஷன், புல்டெர்ரியர், முதலிய முரட்டு நாய்களும், சைனீஸ், ஆப்கன் முதலிய அழகு நாய்களும் இவரிடத்