பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

தில் உள்ளன. அல்சேஷன் என்பது ஜெர்மானிய நாட்டு இனம். இது அச்சுறுத்தும் தோற்றமுடையது. புல்டெர்ரியர் என்பது ஆங்கில நாட்டு இனம். இது மிகவும் வீறுடையது. நம் நாட்டில் கோழிச்சண்டை நடத்துவதுபோல இங்கிலாந்தில் புல் டெர்ரியர் நாய்களைக் கொண்டு நாய்ச் சண்டை நடத்துவார்களாம். ஆனால் இவ்விளையாட்டு இப்போது அந்நாட்டில் சட்ட பூர்வமாகத் தடுக்கப்பட்டுவிட்டதாம். உயர்ந்த இன நாய்களைக் கலப்பின்றி உற்பத்தி செய்து இவர் விற்பனை செய்கிறார்.

இங்கு ‘இந்திய நாய் வளர்ச்சிக் கழகம்’ (Kennel Club of India) என்ற ஓர் அமைப்பு உள்ளது. இதன் பொறுப்பாளர், நம் நாட்டின் தலைவரான இராசேந்திர பிரசாத் அவர்களே. இதன் செயலாளராக நீண்டநாள் பணியாற்றிவருபவர் திருமதி கோல்டுஸ்மித் அம்மையார். இந்திய நாட்டின் தலைமைக் கழகமே நாய்பங்களா தான். மாநிலங்களில் தனித்தனிக் கழகங்கள் உண்டு. நாய் இனத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது, நாய்க் கண் காட்சி (Dog Shows) களை நடத்துவது, நாய்களைப் பற்றிய சிறந்த செய்தித்தாள் ஒன்று நடத்துவது, உயர்ந்த இன நாய்களுக்கு அவற்றின் தகுதியறிந்து சான்றிதழ் வழங்குவது எனப் பல நோக்கங்கள் இக்கழகத்திற்குரியவை. நாய்களைப் பற்றித் திருமதி கோட்டுஸ்மித் அம்மையாரிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் பின் வருமாறு குறிப்பிட்டார்.

“மேலை நாட்டு நாய்களைப்போல், இந்திய நாட்டு நாய்களிலும் வலிமையும் அறிவும் உள்ள இனங்கள் உண்டு. இராசபாளையம், கோம்பை என்ற இரண்டு இனங்களும், இந்திய இனங்களில் சிறந்தவை. மேலை நாட்டு நாய்களுக்கு ஒப்பானவை. ஆனால் இந்தியர்கள் இவற்றின் சிறப்பை உணர்வதில்லை. ‘அல்சேஷன் ! அல்சேஷன் !’ என்றே அலைகின்றனர். இந்திய