பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
49

டங்களில் விளைவதில்லை. ரிவர் டேலின் மண் வளமும் சூழ்நிலையும் ஆப்பிள் விளைவதற்கு ஏற்றனவாக இருந்தன போலும், இப்போது இது எங்கும் பயிரிடப்படுவதில்லை. பேரிக்காய்கள் (Strawberries) இங்கு நிறைய விளைகின்றன. லாடம் பழம், சாம்பிராணி வாழை, கரு வாழை, செவ்வாழை, சந்தன வாழை எனப் பலவகை வாழைகள் இங்கு பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் லாடம் பழம், சிறு மலை வாழையைப் போன்று சுவையுடையதாக இருக்கும். பெரு நாவல், சிறு நாவல் என இரு வகை நாவற் பழங்களும் இங்கு விளைகின்றன. பலா மரங்கள் சேர்வராயன் மலைகளில் எல்லாப் பகுதிகளிலும் நன்கு வளர்கின்றன. மாதுளை, கொய்யா முதலிய பழங்களும் இங்கு நிறைய விளைகின்றன. இங்கு விளையும் அன்னாசிப் பழம் (Pine-apple) உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மிக்க சுவையுடையது.

லாக்குவட் (Loquat) என்ற ஒரு வகைப் பழம் இங்கு எல்லாத் தோட்டங்களிலும் பயிரிடப்படுகிறது. இது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிகமாகக் கிடைக்கும். இதிலிருந்து இங்கு வாழும் வெள்ளையர்கள் ஒரு வகைச் சாராயம் (Champagne) இறக்கி வந்தார்கள்.

ஏலக்காய், மிளகு, கடுக்காய் முதலியவை இங்கு குறைந்த அளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு வாழும் மலையாளிகளால் பனிச் சாமை, அவரை, சர்க்கரை வள்ளி, குச்சி வள்ளி முதலியன பயிரிடப்படுகின்றன. உருளைக்கிழங்கும் இங்கு பயிரிடப்படுகிறது. ஆனால் அதிக அளவில் இல்லை.


மக்கள் :

சேர்வராயன் மலைகளில் வாழும் பழங்குடி மக்கள் மலையாளிகள் எனப்படுவர். இவர்கள் மொழி கொச்


கு.வ.—4