பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

சைத் தமிழ். ‘கவுண்டர்’ என்ற சாதிப் பெயரைத் தங்கள் பெயருடன் சேர்த்து வழங்குகின்றனர். இவர்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களில் பயிர்த் தொழில் செய்தும், காஃபித் தோட்டங்களில் கூலிகளாகப் பணி செய்தும் வாழ்கின்றனர். சேர்வராயன் மலை உச்சியில் இவர்களுடைய குல தெய்வம் உள்ளது. அங்குக் கோயில் கொண்டிருக்கும் இறைவனின் பெயர் சேர்வராயன் என்பதாகும். ஆண்டுக்கொருமுறை மலையாளிகளெல்லாம் அவ்விடத்தில்கூடி விழாவெடுப்பர். இம் மலையாளிகளின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் நூதனமானவை. கொல்லி மலை, பச்சை மலை, கல்ராயன் மலை முதலிய இடங்களில் இவ்வினத்தார் நிறைந்து வாழ்கின்றனர். இவர்களுடைய முழு வரலாறும் அடுத்த பகுதியில் விரிவாகக் கூறப்படும்.