பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

கணக்குப்படி 1 டன் தூய்மையற்ற இரும்பை உற்பத்தி செய்ய 8 1/2 ஏகர் காடு அழிக்கப்படவேண்டும். 1 டன் தூய்மையாக்கப்பட்ட இரும்பு (wrought iron or steel) உற்பத்தி செய்ய 35 ஏகர் காடு அழிக்கப்பட வேண்டும். எனவே எரிபொருள் தட்டுப்பாட்டால் இரும்புருக்கும் தொழில் சேலம் மாவட்டத்தில் கைவிடப் பட்டது.

கொல்லிமலையிலும் சேலம் மாவட்டத்தின் மற்றப் பகுதிகளிலும் படிந்திருக்கும் இரும்புத்தாது மிகவும் தூய்மையானது. கந்தகக் கலப்பும், பாஸ்பரஸ் கலப்பும் (Sulphur and phospherous) அற்றது. எனவே இதிலிருந்து மிகவும் உயர்ந்தரகமான எஃகு உற்பத்தி செய்ய இயலும். அலெக்சாந்தர் காலத்திலிருந்து மார்க்கோபோலோ காலம் வரையில் நம் நாடு எஃகு உற்பத்தியில் பெயர் பெற்றிருந்தது. சேலம் மாவட்டத்தில் கூட எஃகுத் தொழில் மிகவும் சிறப்புற்றிருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சேலத்தில் வாழ்ந்த [1] அருணாசல ஆசாரியினால் தூய எஃகு கொண்டு செய்யப்பட்ட வேட்டைக் கத்தி (hunting knives) களுக்கும், குத்துக் கோல்களுக்கும் (pig-sticking lances) இந்திய நாடு முழுவதும் நல்ல வரவேற்பிருந்தது. வெள்ளி அல்லது தங்க முலாம் பூசப்பட்ட ‘சிறுத்தைப்பல்’ (Cheetah tooth) என்ற மடக்குக் கத்தி (Pen knives) கள் செய்யும் தொழில் சென்ற சில ஆண்டுகள் வரை சேலத்தில் சிறப்பாக இருந்தது.

இத்தகைய நுண் கலையாற்றல் நிறைந்த சேலம் மாவட்டக் கலைஞர்களின் கைகள் சோர்ந்து கிடக்கின்றன. இரும்புத்தாது பூமிக்கடியில் உறங்குகிறது. ஆனால் இவ்வுறக்கம் இனி அதிக நாள் நீடிக்காது. நெய்வேலி நிலக்கரி, கஞ்சமலை இரும்புக்குத் தஞ்சமளிக்கும். கொல்லி மலை தன் கனிவளத்தைத் தமிழரின்


  1. சேலத்தில் இவர் பெயரால் இன்றும் ஒரு வீதி உள்ளது.