பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

கரமண்டையிலும், சேர்வராயன் மலைச் சரிவுகளிலுள்ள ஊர்களிலும், மஞ்சவாடிக் கணவாய்க்கு வடக்கிலுள்ள தொம்பக்கள்ளனூர், பட்டுக்குணம் பட்டி என்ற ஊர்களிலும் நாட்டான் என்பவனைத் தங்கள் தலைவனாய்ப் பச்சை மலையாளிகள் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு துணை நாடும் பல பட்டிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பட்டியும், அவ்வூர்க் கவுண்டனின் ஆணைக்குட்பட்டிருக்கும். அவ்வூர்க் கவுண்டனுக்கு மூப்பன் என்று பெயர். அவனுக்குத் துணையாகக் கங்காணி என்ற தலைவனும் உண்டு. ஒவ்வொரு துணை நாட்டிற்கும் ஒரு தலைவனுண்டு. அவனை நாட்டான் என்று அழைப்பர். அவனுக்கு நாட்டுக் கவுண்டன், குட்டிக் கவுண்டன் என்ற வேறு பெயர்களும் உண்டு. ஒவ்வொரு நாட்டானுக்கும் துணையாகப் பல காரியக் காரர்களுண்டு. அவர்களைப் பணியில் அமர்த்தும் அதிகாரம் நாட்டானுடையது. இந் நாட்டான் ஏழு சின்னதுரைகளடங்கிய அவையின் அதிகாரத்துக்கு உட்பட்டவன். இந்த அவையின் தலைவனுக வீற்றிருப் பவன் பெரியதுரை. இவனை ராஜா என்றும் சில சமயங்களில் குறிப்பிடுவதுண்டு. இவன் வாழ்விடம் பச்சை மலையிலுள்ள சேதகம். இத் துரைமார்களுக்குப் பல பேரமைச்சர்களுண்டு. ஆனல் அவ்வமைச்சர்களின் அதிகாரம் மிகவும் குறைவுதான். இவ்வமைச்சர்கள் பச்சை மலையிலுள்ள பக்கலத்திலும், பைத்தூரிலும், கீரிப்பட்டியிலும் வாழ்கிறார்கள். பைத்தூர் அமைச்சன் பன்னிரண்டு கரை மக்களாலும், கீரிப்பட்டி அமைச்சன் ஆறு கரை மக்களாலும் ஏற்றுப் போற்றப்படுவான். பைத்தூர் அமைச்சன் பக்கலம் அமைச்சனைத் தன் ஆணைக்கடங்கியவகைக் கருதுவதுண்டு.

பெரிய மலையாளிகள் கல்வராயன் மலையிலும், சேர்வராயன் மலையிலும், சித்தேரியிலும் வாழ்கின்றனர். இவர்களைக் கல்ராயர் என்றும் கூறுவர். இவர்கள். தங்களைக் காராளர் என்ற வேறு பெயராலும் குறிப்பிடு