பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

மலையாளிகளிடம் மணவிலக்குச் செய்து. கொள்ளும் பழக்கம் உண்டு. ஆனால் மணவிலக்கின் போது எல்லாக் குழந்தைகளையும் (வேறு கணவனுக்குப் பிறந்தவைகளாய் இருந்தாலும் சரி) கணவனிடம் ஒப்படைத்து விடவேண்டும்.

பச்சை மலையாளிகள் ரூ 25 ஒறுப்புத் தொகை (Fine) யாகப் பெற்றுக் கொண்டு மணவிலக்கு அளிப்பர். இது சமவெளியிலிருந்து கற்றுக் கொண்ட பழக்கம். ஒரு பச்சை மலையாளி மணவிலக்குப் பெறவிரும்பினால் அதைக் குருவின் முன்னிலையில் கூற வேண்டும். மண விலக்கிற்கு அறிகுறியாக ஒரு வைக்கோல் துண்டையோ அல்லது மரத்துண்டையோ, கணவன் மனைவியிடம் கொடுப்பான். மணவிலக்குப் பெற்ற பெண் முன்னாள் கணவன் இறந்த பிறகே மறுமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறாள். கைம்பெண் மணம் {Widow remarriage) எல்லா மலையாளிகளிடையிலேயும் காணப்படுகிறது. கொல்லி மலையாளிகள், கணவனின் உடன் பிறந்தானை மணக்க எந்தக் கைம்பெண்ணையும் அனுமதிப்பதில்லை. பச்சை மலையாளிகளிடம் இக் கட்டுப்பாடு கிடையாது.

கொல்லி மலையாளிகளிடையே கைம்பெண் மணம் நடந்தால் மணப் பெண்ணும் மணமகனும் எதிரெதிரில் முழந்தாளிட்டு உட்கார்ந்து கொள்ள வேண்டும். நடுவில் ஒரு திரையிடப்படும். மணமகன் தாலியைத் திரையினடியில் கொண்டுவந்து பெண்ணின் கழுத்தில் வைப்பான். ஊர்க்கவுண்டன் தாலியைக் கட்டிய பிறகுதான் மணமகன் பெண்ணின் முகத்தைப் பார்க்க முடியும். மறுமணத்தின் போது, கைம் பெண்ணானவள் தன் முதல் கணவனுக்குப் பிறந்த குழந்தைகளை, அவன் உடன் பிறந்தாரிடமோ அல்லது நெருங்கிய உறவினரிடமோ ஒப்படைத்துவிட வேண்டும். தந்தையின் சொத்துக்களெல்லாம் அக் குழந்தைகளுக்குப்