பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

பட்டா செய்யப்படும். அல்லது முன் கூட்டியே பட்டா செய்யப்பட்டிருக்கும். அச் சொத்துக்களை இரண்டாம் கணவன் அனுபவிப்பதைத் தடுக்கவே இம் முறையைக் கையாளுகின்றனர்.

பூப்பெய்தல் :

ஒரு பெண் பூப்பெய்தியதும், அவளை வீட்டிலிருந்து விலக்கித் தனியிடத்தில் வைப்பது மலையாளிகளின் வழக்கம். 30 நாட்கள் விலக்கு நாட்களாகக் (Pollutionperiod) கருதப்படும். ஆனால் சமவெளியிலுள்ள மக்களைப் பார்த்து இவர்களும் இப்போது அந்நாட்களைக் குறைத்துக் கொண்டு வருகின்றனர். பச்சை மலையாளிகள் ஒரு பெண் பூப்பெய்தியதை அறிந்ததும் ஊருக்கு வெளியிலுள்ள ஒரு குடிசையில் ஐந்து நாட்கள் வைத்திருப்பர். ஆறாம் நாள் அப் பெண்ணை நன்னீராட்டி வீட்டிற்கு அழைத்து வருவர். அடுத்த முப்பது நாட்கள் விலக்கு நாட்களாகக் கருதப்படும். அந்நாட்கள் கழியும் வரையிலும் ஊர் மக்கள் யாரும் அவ் வீட்டிற்குள் செல்ல மாட்டார்கள். அந்த முப்பது நாட்களில் பெண்ணானவள் நாள் தோறும் தலையில் நீர்பெய்து குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை வீட்டைத் தூய்மைப்படுத்த வேண்டும். ஊத்தங்கரையிலுள்ள பச்சை மலையாளிகள் 12 நாள் விலக்கிவைக்கின்றனர். கொல்லி மலையாளிகளில் சிலர் 30 நாட்களும், வேறு சிலர் 15 நாட்களும் விலக்கு நாட்களாகக் கொள்கின்றனர். பெரிய மலையாளிகள் இடத்திற்குத் தகுந்தாற்போல் 7 நாட்களிலிருந்து 11 நாட்கள் வரை விலக்கு நாட்களாகக் கொள்கின்றனர். விலக்கு நாட்கள் முடிந்ததும், ஒரு பார்ப்பனப் புரோகிதரை அழைத்து வந்து வீட்டைத் தூய்மைப்படுத்துவர்.

மகப் பேறு :

குழந்தை பிறந்த பன்னிரண்டாம் நாளிலோ அல்லது பதினைந்தாம் நாளிலோ அல்லது பதினாறாம்