பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்து மறவர் குலங்கள் I 3 வாய்ப்பளிக்கும் வகையில் தகடூர்ப் போர் ஆற்றியோனு மாகிய அதியமான் நெடுமான் அஞ்சியையும், அவன் மறை வால் அல்லலுறும் காட்டின் அவலநிலையைத் தன் ஆட்சி கலத்தால் அகற்றி, பாரம் மிகுதியாலும், வழியருமையாலும் வண்டியின் அச்சு இடைவழியில் முறிந்து போகுமாயின், அங்கிலேயில் உதவுவதாக என்றே, உமணர் எனும் உப்பு வணிகர் உடன் கொண்டு செல்லும் சேம அச்சுப்போல் அமைந்து காத்த கட்டிளங் காளேயாகிய பொகுட்டெழி னியையும் பெற்றளித்த பீடும் பெருமையும் வாய்ந்தது, முச்சங்கம் நிலவிய முதுபெரும் காலத்தவராய அதியர், கி. பி. பதின்மூன்ரும் நூற்ருண்டளவிலும் பெருவாழ்வு பெற்றிருந்தனர். விசயாலயன் வழிவந்த பிற்காலச் சோழர் குல மூன்ருங் குலோத்துங்கன் காலத்தில், அதியமான் இராசராசதேவன் என்பாைெருவன், தகடுர் காட்டு மலேய னுரரை இறையிலியாக்கித் திருவண்ணுமலேக் கோயிலுக்கு வழங்கினன் என்று, அக்கோயில் கல்வெட்டொன்றும் கூறு கிறது. - . . . - 2. ஆவியர்: முருகப் பெருமான் கோயில் கொண்டி ருக்கும் ஆறு படை வீடுகளுள் ஒன்ரும் பெருமையுடைய தான, ம்துரை மாவட்டத்துப் பழனி என்ற மலேயகத்து மாநகர்க்குச் சங்க கால மக்கள் இட்டு வழங்கிய பெயர் பொதினி என்பதாம். ஆவிநன்குடி என்ற அழகுத் திருப் பெயர் இட்டு அழைக்கிறது திருமுருகாற்றுப்படை சித்தன் 1. எருதே இளைய நுகம் உணராவே; சகடம், பண்டம் பெரிது பெய்தன்றே; அவல் இழியினும், மிசை ஏறினும் அவனது அறியுநர்யார் என, உமணர் கீழ்மரத்து யாத்த சேம அச்சு அன்ன இசைவிளங்கு கவிகை நெடியோன் -புறம்: 102.