பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தமிழகத்தில் கோசர் என்ற சிறப்புப் பெயருடையயோனுகிய செவ்வேள் முருகன் உறைவதால், அதற்குச் சித்தன் வாழ்வு என்ற பிறிதொரு பெயரும் உண்டு. "சித்தன் வாழ்வு இல்லங்தொறும் மூன்று ள்ளியுடைத்து ’ எனப் பாராட்டப் பெறுவது அறிக. பொதினி மலேயை அரசிருக்கையாகக் கொண்ட அம்மலை காட்டை ஆவியர் என்பார் ஆண்டுவந்தனர். அவ் ஆவியர் குடியில் வந்த நெடுவேள் ஆவி என்பான், சிறந்த வீரனுய்த் திகழ்ந்தான். முருகன் கிகர் முழுவலி படைத்த அவ்வாவியர் பெருமகன், சிறந்த குதிரைப் படையுடையாரும், அண்டை நாட்டு ஆனிரைச் செல்வங்களேக் கவர்ந்து த மத க் கி க் கொள்வதில் ஆற்றல் மிக்கவரும், சேரப் பேரரசரால் சிறங் தார் என மதிக்கப் பெற்று, அவர் படையுள் சிறப்பிடம் அளிக்கப் பெற்றவரும் ஆகிய மழவர் என்ற மறவர் இனத்தை வெற்றி கொண்ட வரலாற்றினேப் புலவர்கள் வாயார வாழ்த்திப் பாடியுள்ளனர். ஆவியர் குடியினர் முடியுடை மூவேந்தர்கட்கு மகட் கொடை வழங்கும் பெருகிலே பெற்ற பெருங்குடியினர் ஆவார். சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனின் மகனும், இமயத்து எல்லே வரைக்கும் புகழ்பரப்பி இமய வரம்பன் என்ற புகழோடு திகழ்ந்தவனுமாகிய, சேரமான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மனைவியர் இருவர் என வும், ஒருத்தி சோழன் மணக்கிள்ளி மகள் எனவும், மற் ருெருத்தி வேளாவிக் கோமான்பதுமன் மகள் எனவும் அறியப் 1. “உருவக்குதிரை மழவர் ஒட்டிய முருகன் நற்போர் நெடுவேள் ஆவி அறுகோட்டு யானைப் பொதினி.” “முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி. -அகம்: 1.61,