பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3 தமிழகத்தில் கோசர் களிலும், நீர் சிறிதே ஊறிநிற்குமாதலின், அங்ைேர, நீண்ட கயிறுகளில் கட்டிய சின்னம்சிறு முகவைகளால் முகப்பர். நீர் காணுது நெடுந்தொலைவு கடந்து வரும் அக் கால்கடை கள், ஆங்காங்குள்ள அக்கிணறுகளைக் கண்ணுற்றதும், செங், துTள் பரக்குமாறு காற்றென விரைந்தோடி, கொங்கர் முகந்து முகந்து கொட்டும் நீரை மொய்த்துக் கொள்ளும்." ஆனிரை செல்வத்தை இவ்வாறு அரும்பாடு பட்டுக் காக்கும் கொங்கர், கொற்றம் மிக்க குடிமக்களாக வும் விளங்கினர். வாளேந்திப் போர் புரிவதில் வல்லுரு ராய் வாழ்ந்த அக்கொங்கர், பகையரசர்களின் பேரரண் களேத் தப்பாது தகர்த்தழிக்க வல்ல தந்திரமும் வாய்க்கப் பெற்றிருந்தனர். கல்கால் கவணை என்ற கருவிகளைத் துணை கொண்டு கொங்கர் எறியும் கற்கள், கற்கோட்டைகளையும், கண்ணிமைக்கும் நேரத்தில் இடித்து இல்லையாக்கிவிடும்.2 சேரநாட்டின் கிழக்கெல்லேயும், சோழநாட்டின் மேற். கெல்லேயும், பாண்டி நாட்டின் வடமேற்கெல்லேயும் ஒன்று கலக்கும் இடைகிலத்தை தாயகமாகக் கொண்டு வாழ்ந்த கொங்கர்பால் அளவின்றிப் பெருகியிருந்த ஆனிரை செல் வத்தின்பால் கொண்ட ஆசைப் பெருக்காலும், அவர்பால் பொருந்தியிருந்த அரிய போர்ப்பயிற்சி கண்டு கொண்ட அச்சமிகுதியாலும், சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர் களும் அக்கொங்கரை முறியடிப்பதில் முனேந்து கின்றனர். 1. “பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச் சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல் கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும் ஆகெழு கொங்கர் நாடு.” - - - . . . . . . . . . . . . . . -பதிற்று: 22. 2. "ஆரெயில்அலைத்த கல்கால் கவணை நாரரி நறவின் கொங்கர்.” - - -பதிற்று: 88.