பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்து மறவர் குலங்கள் 21. தலைப்பட்டனர். அவ்வாறு தோற்ருேடிய அவர்கள். மேலேக் கடலைச் சார்ந்துள்ள காடு புகுந்து ஒழிந்துகொள்ளும் வரை விடாது துரத்திச் சென்று வென்ருன் அவ் ஆய் அண்டிரன். கொங்கரை வெற்றி கொண்ட வேந்தர்களின் பெயர் மறைந்துவிட்டது; ஆனால், கொங்கர் வாழ்ந்த நாடு, இன்றும் கொங்குநாடு என்ற பெயரிலேயே திகழ்ந்து, அவர் பெயரை சினேப்பூட்டி கிற்கிறது. 5. தொண்டையர்: செந்தமிழ் மொழி வழங்கும் சிறப்புமிகு பன்னிரு உள்காடுகளாய்ப் பிரிந்து வழங்கிய வட வேங்கடம் தென் குமரிகட்கு இடைப்பட்ட பண்டைத் தமிழகத்தில், வேங்கட மலைக்கு இப்பால், தமிழகத்தின் வடக்கெல்லேகளாய் விளங்கிய உள்நாடுகள் இரண்டிற்கும் தொல்லோர் இட்ட பெயர்கள், அருவா, அருவா வடதலை என்பனவாம். பட்டினப்பாலே பெற்ற பெரியோளுகிய கரிகாற் பெருவளத்தான், அருவாளரை வென்று அடிமை கொண்ட பின்னர், அவர் பெயரால் விளங்கிய அங்காடுகள் இரண்டும், தொண்டை நாடு என்னும் பெயரால் ஒரே நாடாகித் தொண்டையர் என்பார்க்கு வாழ்வளிக்கத் தொடங்கிவிட்டது. பண்டு, அருவா, அருவா வடதலே என்ற இரு சிறு உள்ார்டுகளாகப் பிரிவுண்டு திகழ்ந்த அங்காடு, தொண்டையர் வருகைக்குப் பின்னர் ஆமூர், இளங்காடு, ஈக்காடு, ஈத்துார். ஊற்றுக்காடு, எயில், கடிகை, கலியூர், களத்துர், குன்றபத்திரம், சிறுகரை, செங்காடு, செங் திருக்கை, செம்பூர், தாமல், படுவூர், பல்குன்றம், புலால், புலி யூர், பேயூர், மணவூர், வெண்குன்றம், வேங்கடம், வேலூர் 1. 'கொங்கர்க் குடகடல் ஒட்டிய ஞான்றைத் . தலைப் பெயர்த்திட்ட வேலினும் பலவே