பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தமிழகத்தில் கோசர் இவ்வாறு பேரரசர்களும், பேராண்மை மிக்க பெரிய வீரர்களும், தத்தம் உடைமையாக்கிக் கொள்ளும் முயற்சியில் தத்தம் உயிரையும் விடத்துணியும் விழுமிய சிறப்பு வாய்ந்த, பூழிநாட்டு மண்ணில் தோன்றி மாண்புற்று வாழ்ந்தவரே பூழியராவர்." 7. மலேயர்: தென்னுர்க்காடு மாவட்டத்தில் பாயும் பெண்ணையாற்றின் கரையில் உள்ள திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்ட சிறு நாட்டை ஆண்டுவந்தவர் மலே யர் என்ற மரபினராவர். மலேயர் எனவும் மலேயமான்கள் எனவும் அழைக்கப்பெறும் அவர்கள் ஆண்டமையால் மலேயமான் நாடு என்றும், மலாடு என்றும் பெயரி ட் டு அழைக்கப் பெறும் அங்காடு, காடும் மலேகளும் சூழ, கடு நாட்டில் இருப்பதால், கடல் கோள்களால் அழிவுறுவதோ, பகைவர் தம் படை கோள்களால் பாழுறுவதோ இல்ஆ. அங் காட்டின் நடுவிடத்தே முள்ளுர் என்ற மலையொன்றும் உளது: அகில் ஆரம் முதலாம் பெருமரங்கள் அடர்ந்து எவ ராலும் அணுகற்குஆகா இயற்கையாண் அமையப் பெற்ற அம்மலே முடியில், மலேயமன்னர்கள் அமைத்திருந்த அரன் வலி மிக்க கோட்டை ஒன்றும் உளது. முள்ளுர் மலக்காட் டின் சந்தன மணத்தையும் முள்ளுர் மலேக்கோட்டையின் காவற் சிறப்பையும் கபிலர் முதலாம் பெரும்புலவர்களும் பாடிப் பாராட்டியுள்ளனர். - - . இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருது களத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இழந்தநாடு தந்தன்ன வளம்: -அகம்: 199. 2. கடல்கொளப்படாஅது உடலுநர் ஊக்கார்; - கழல்பு:ன திருந்தடிக் காரி நின்ஞ்டே -புறம்-122.