பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்து மறவர் குலங்கள் 39 8. மழவர் தமிழகத்து மறவர் குலங்களுள், அதியர் ஆவியர், ஓவியர், தொண்டையர், வேளிர் என்ற இவ்வைங் குலத்தவரும் தத்தமக்கென ஒவ்வோர் அரசு அமைத்துக் கொண்டு நாடாண்ட அரச இனத்தவராவர். கொங்கரும் பூழியரும் தனியரசு அமைத்து ஆண்டவரல்லராயினும், ஆனிரை ஒம்புதலாம் ஒரு தொழில் மேற்கொண்டு வாழ்ந்தவ ராவர். மழவர், இவ்விருவகையுள், எவ்வகையுளும் சேர்க் தவரல்லர். சோழப் பேரரசின் உள்நாட்டுத் தலைநகராகிய உறையூர்க்கு மேற்கில், காவிரியாற்றின் வட க ைர யி ல், கொங்கு காட்டிற்கு அணித்தாக, மழ5ாடு எனவும், மழ கொங்கம் எனவும் பெயர் பூண்டிருந்த ஒரு சிறு நிலப்பகுதியே மழவரின் பிறப்பிடமாம் என்ருலும், அவர்கள், ஆங்கு நிலத்த வாழ்வு மேற்கொண்டிராது, காடோடி வாழ்வையே பெரிதும் விரும்பி மேற்கொண்டிருந்தனர். - செம்மறியாட்டுக் கிடாயின் இரு கொம்புகள் போல் சுருள்கொண்டு, பிடரி மறையத் தொங்கும் தலைமயிரும், செம்மை நிறம் மாருக் கண்களும் கொண்டு, கண்டார் அஞ் சத்தக்க தோற்றப் பொலிவுடையராகிய மழவர்பால், பகை வர்தம் பெரிய படைகளையும் பாய்ந்தழிக்க வல்ல சிறந்த குதிரைப்படையும் இருந்தது. வண்டுகள் வந்து மொய்க்கு மளவு புதுமை நலம் கெடா மலர்களால்ஆன தலைமாலே அணிந்து, கலிர் கலீர் என ஒலிக்கும் வீரக்கழல் புனைந்து, குதிரைப் படை துணை செய்ய மழவர் கூட்டம் வெளிப்பட்டு விட்டது என்ருல், வந்தது அழிவு என வேந்தரெல்லாம் சிந்தை கலங்குவர். - . . --Commons sibiBOT (பேச்சு) 05:21, 29 பெப்ரவரி 2016 (UTC) ~~* 1. தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த சுவல் மாய் பித்சை, செங்கண் மழவர் அகம் 101. 'வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல் - உருவக் குதிரை மழவர். அகம் 1.