பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தமிழகத்தில் கோசர் ராய்க், கைப்பொருள்கொண்டு காட்டுவழியைக் கடந்து போவாரை எதிர்நோக்கிக் காத்துக் கிடந்தனர் மழவர், அக்காலே, ஓர் அரசன் விழைவையும் வேட்கையையும் அவன் பகையரசன்பால் எடுத்துரைத்தும், ஒப்புதல் பெற் றும் தூதுரைக்கும் தொழில் மேற்கொண்ட அந்தண முதி 'யோன் ஒருவன், அரசன் செய்தி பொறித்த ஒலேச்சுருள் அடங்கிய உறையேந்தியவனப் அவ்வழியில் வரலாயினன். உண்ணுமையால் உடல் தளர்ந்திருக்கும் அவனேக் கண் னுற்ற மழவர், "வருவோன் வறியன்போல் தோன்றினும், உண்ணுத்ே உறுபொருள் சேர்த்து உறையில் இட்டு வைத் திருத்தலும் கூடும்; ஆகவே, இவனே வடிவம் கண்டு வாளாப் போகவிடுதல் கூடாது' என்று கருதினர். அங்கிலேயில் அந்த "ணனும் அவர்களே அணுகிவிட்டான்; அவ்வளவே, மழ வருள் ஒருவன் வாள்கொண்டு வெட்டி வீழ்த்திவிட்டான் அந்தணன. வழியிடை வீழ்ந்த அவனே மழவர்கள் வளைத் துக் கொண்டு அவன் உடையையும், உடலையும் துருவிக் துருவி ஆராய்ந்து விட்டனர்; உறையுள் ஒலேயைக் கண்ட னரேயல்லது உறுபொருள் ஏதும் கண்டிலர்: உடுத்திருக் கும் ஆடையும் ஒராயிரம் பொத்தல் உடையவாக உருக் குலேந்து போயிருப்பக் கண்டனர். எதற்கும் உதவா ஏை முப் பார்ப்பான் இவன் என்பதை அறிந்து கொண்டார்கள்; ஆனல், இவனே வாளாக் கொன்ருேமே என்ற எண்ணமே அவர்கள் உள்ளத்தில் எழவில்லை; மாருக, ஏதும் கடவாதது போல், அந்தணனைக் கொன்று வீழ்த்த உதவிய அம்பின் முனையில் படிந்திருக்கும் குருதிக்கறையைத் துடைத்து எறிந்து விட்டு, அவ்வம்பைத் தடவிக் கொடுத்தவாறே கடக்கலாயினர். இரக்கம் ஒன்றிலா அரக்கராம் அம்மழவர் தம் கொடுமைதான் என்னே! 1. 57555 LITಗೆ LITT 64.೧೩ರ್ಿ ಶಿಖ படையுடைக் கையர் வருதொடர் நோக்கி