பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தமிழகத்தில் கோசர் 10 வேளிர் : ஆய், பாரி, பேகன் போலும் வள்ளல் களையும், நெடுவேள் ஆவி, டுேர்க்கிழவன் எவ்வி, நன்னன் வேண்மான், வெளியன் வேண்மான், பிடவூர் வேண்மான், நெடுவேளாதன், இளவிச்சிக்கோ, இருங்கோவேள் முதலாம் பெருவீரர்களையும், அழுந்துார்வேள், நாங்கூர்வேள், மையூர் கிழான் வேண்மான்போலும், முடியுடை மூவேந்தர்க்கு மகட்கொடை அளிக்கும் மாண்புடையாரையும், அழும்பில் வேள்போலும், வடவர் புறங்கண்ட படைத்தலேவர்களேயும் பெற்றளித்த பெருமைசால் பழம்பெரும் தமிழ்க்குடி வேளிர் குடியாம். கடல் கடந்து ஈழத்தை வென்றும், கங்கையைக்கடந்து இமயத்தை வென்றும் வீறுகொண்ட வேந்தளும் கரிகாற்பெருவளத்தானேயும் எதிர்க்க வல்ல வேளிர் பதினொருவர் பிறந்ததும் இவ்வேளிர் குடியேயாம். . இவ்வாறு வள்ளல்களாய், வீரர்களாய், வளமார் வாழ்வுடையராய் வாழ்ந்து மறைந்த வேளிர்கள் பிறந்த குடிபற்றிய வரலாற்றினேப் பிழையற வகுத்துரைக்க மாட்டாது வரலாற்றுப் பேராசிரியர்கள் விழிப்புண்டு நிற்கும் கிலேயிலேயே, தமிழக வரலாற்று மூலங்கள் உள்ளன. κ "தேவரெல்லாம் கூடி, யாம் சேர இருத்தலின் மேருத் தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதற்கு அகத்தியனரே ஆண்டு இருத்தற்கு உரியர் என்று அவரை வேண்டிக் கொள்ள, அவரும் தென்திசைக்கண் போதுகின்றவர் துவார பதியில் போந்து, நிலங்கடந்த நெடுமுடிஅண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண்குடி வேளிர் உள் ளிட்டாரையும், அருவாளரையும்கொண்டு போந்து, காடு செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக் கொன்ற யானை' -அகம்: 37.5.