பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்து மறவர் குலங்கள் 39 கெடுத் து நாடாக்கிப் பொதியிலின் கண் இருந்தனர்” எனத் தொல்காப்பியப் பாயிரவுரையில், ஆசிரியர் நச்சினர்க்கினியர் கூறியிருப்பதையும், அரையம் என்ற பேரூரில் இருந்து அர சான்ட வேளிர்தலைவனம் இருங்கோவேளேக் கண்டு கபிலர் பாடிய பாட்டில் வரும் தொடர்களேயும் சான்றுகளாகக் கொண்டு, தமிழகத்து வேளிர்களே, வடநாட்டுக் கண்ணன் வழியினராய்த் துவாரகையில் வாழ்ந்த யாதவ குலத்தவ ராக்குவர் சில வரலாற்று ஆசிரியர்கள். ஆசிரியர் கச்சினர்க்கினியர் குறிக்கும் துவராபதி, நிலங் கடந்த நெடுமுடி அண்ணல் வாழ்ந்த வடகாட்டுத் துவாரகை அன்று, பறம்பு மலேயைச் சார்ந்த ஒரு பகுதியேயாகும். ஆதலாலும், கச்சினக்கினியர், கன்ன பரம்பரையாகப் பல பட வழங்கி வந்த செய்திகளே யெல்லாம் ஒரு தொடர்பு படுத்தி எழுதியுள்ளார் எனக் கொள்ளவேண்டுதலின், அவர் கூறியவற்றிற்கெல்லாம் சொற்கிடக்கை முறை யானே பொருள் கொள்ளவேண்டும் என்னும் கியதி இன்ரும் ஆத லாலும், துவராபதிக்கும்5ெடுமுடி அண்ணலுக்கும் சம்பந்தம் கூறுவதும், அதற்கும் வேளிர்க்கும் சம்பந்தம் கூறுவதும் பொருந்தாதாம் எனக் கூறி, வேளிரின் வட நாட் டு க் தொடர்பை வேரறுத்துத் தமிழ்க்குருதி பாய்ச்சிக் காட்டுவர் வேறு சில வரலாற்றுப் பேராசிரியர்கள். - தமிழ் நிலத்தோடு ஒன்றி கின்று, தமிழ் தழைக்கத் தமிழ்ப் பெரும் புலவர்களைப் பேணிப் புரந்த அப் பெருமக் களேத் தமிழினத்தின் வேறுபட்டவராகக் கொள்ளத் தமிழ் 1. "நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச் செம்பு புனைந்து இயற்றிய செண்நெடும் புரிசை உவரா ஈகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த - வேளிருள் வேளே!' -புறம்: 201