பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இடமும் இயல்பும் வட இந்தியப் பேரரசுகள் பலவற்றுள்ளும், உலகம் மதிக்கும் ஒப்புயர்வற்ற ஒரு பேரரசு கடாத்திய மெளரிய மரபில், இற்றைக்குச் சற்றேறக்குறைய இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர் அரியணை அமர்ந்து, வட பேரிமயம் முதல் வேங்கடம்வரைப் பரவிய பெருநாடாண்ட் மன்னர் மன்னனும் அசோகன், "என் ஆட்சிக்கு அடிபணி யாது என் அரசோடு ஒத்த அரசு நடாத்திய பெருமை வாய்ந்த பேரரசுகள் என்று கூறிப் பாராட்டிய தமிழகத்து அரச இனங்கள் காண்கனுள், சத்யபுத்ரர் இனமும் ஒன்று. அச் சத்யபுக்ரரே கோசராவர் எனத் திருவாளர் சிமிக், திருவாளர் நீலகண்ட சாஸ்திரியார் போலும் வரலாற்றுப் பேராசியர் பலரும் ஒரு முடிபாகக் கூறுவர். கோசரைப் பற் றிக் கூறும் ஒவ்வோரிடத்திலும், கோசர் கன்மொழிபோ வாயாகின்று, "வாய்மொழி கிலேஇய சேண்விளங்கு கல் லிசை வளங்கெழு கோசர்" என்பனபோலும் தொடர் களேயே வழங்கி அவர்கள் வாய்மொழி வழுவாதவர் என் பதை வற்புறுத்தும் பழந்தமிழ் இலக்கிய வரலாற்று மூலங் கள், சக்யபுக்ார் என்பார் கோசரே என்பதை அரண் செய் கின்றன. கோசர்க்குரிய நாடு, துளுநாடாகும், அவர் பாக்களுள் வரலாற்றுக் குறிப்பு அமையாப்பா ஒன்றுகூட இல்ல'