பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தமிழகத்தில் கோசர் என்று கூறத்தக்க வகையில், தமிழகத்து வ ர ல | ற் று நிகழ்ச்சிகளோடு தமிழகத்திற்கு அப்பாற்பட்ட நாடுகளின் வரலாற்று நிகழ்ச்சிகளையும், தம் காலத்து வ ர ல | ற் று கிகழ்ச்சிகளோடு தமக்கு முந்திய காலத்து வரலாற்று நிகழ்ச்சி களையும் கூறித் தமிழகத்து முதுபெரும் வரலாற்றுப் பேரா சிரியர் என மதிக்கத்தக்க மாமூலனார், கோசரைப் பற்றிய சிறந்த செய்திகள் பலவற்றைத் தெளிவாக அறிந்து அறிவித் துள்ளார். அவர், கோசர்க்குரிய காடு, துளுநாடாகும் என் றும் கூறியுள்ளார். - . மங்களுரை நடுவிடமாகக் கொண்டு, துளுமொழி வழங் கும் நாடே துளுநாடு என்றும், கேரளாட்டிற்கு எல்லே பாகும் சந்திரகிரியே துளுநாட்டிற்கும் எல்லேயாம் என்றும் கூறும் வரலாற்றுப் பேராசிரியர்கள். அதுவே கோ சர் காடாம் என்பதில் ஒத்த கருத்துடையவரேயாவர். கோசரின் வாழிடமாகச் சிலப்பதிகாரம் கூறும் கொங்கு காட்டை, மேல் கொங்காடும் குடகு, மைசூர் பகுதிகளும் அடங்கிய கங்க தேசம்ாகத் திரு. மு. இராகவையங்கார் அவர்களும், கோவை, தென்சேலம் மாவட்டங்களேக் கொண்ட நாடா " திரு. சிமித் அவர்களும் கொண்டாலும், அப் பகுதிகள் துருகாட்டை ஒட்டியனவே என்பது குறிப்பிடத்தகும். 恶 இவ்வாறு கோசர் விந்தியமலைக்குத் தெற்கே, மேற்குக் கடற்கரையை அடுத்துள்ள துளுநாட்டிலும் கொங்கு காட். டிலும் வாழ்ந்தவராவர் என்பது பழந்தமிழ் இலக்கியங் களாலும், வரலாற்றுப் பேராசிரியர்களாலும் உறுதி செய். யப்பட்டிருப்பவும், கோசர் பற்றிய ஆராய்ச்சி உரைக்கும் மெய்ம்மலி பெரும்பூண் செம்மல் கோசர், கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த ப்ாகல் ஆர்கைப் பறைக்கண் பீலித் தோகைக்காவின் துளுந்ாடு' அகம்: 15.