பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

要建 தமிழகத்தில் கோசர் செந்தமிழ் மொழியே ஆங்கு வழக்கில் இருந்தது. மலேயாள மங்கை, தமிழ்த்தாய் வயிற்றில் முகிழ்க்காத காலம் அது. மலையாள மொழிக்கு ஆறு அல்லது ஏழு நூற்ருண்டுகளுக்கு மேற்பட்ட வாழ்வு ஏற்பட்டதில்லை என்பதே மொழிநூல் வல்லாரின் முற்ற முடிந்த முடிபாகும். ஆகவே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய கான்மொழிகள் அப் பண்டைக் காலத்தே வழங்கியதாகவும், அந் நான்கு மொழிகளும் ஓரிடத்தே கலந்து வாழ்தற்கிடமாகிய காமக் கற் பகுதி கான்மொழி நாடென வழங்கப் பட்டதாகவும் கொள்வதோ, அக் கல்வெட்டுத் தொடரையே அடிப்படை யாகக் கொண்டு, "நான்மொழிக் கோசர்’ என்ற மதுரைக் காஞ்சித் தொடருக்கு "நான்மொழி காட்டுக் கோசர்" எனப் பொருள் கொள்வதோ, பொருங்தாது எனக் கொள்க. கோசரைக் குறிப்பிடும் ஒவ்வோரிடத்திலும், பன்மை விகுதி கொடுத்து வழங்குவதிலும், "ஒன்று மொழிக் கோசர்", "வாய்மொழிக் கோசர்", "கோசர் நன்மொழி' என அவர்தம் நாகலம் உணர்த்தும் சிறப்பு அடையாக மொழி” எனும் சொல்லே இனத்து வழங்குவதிலும், பழங் தமிழ் இலக்கியப் பாக்கள் ஒருமைப்பாடுள்ளனவாம் ஆத லாலும், நாலூர்க் கோசர்' என்ற குறுங்தொகைத் தொடர், கோசருள் கால்வேறு கிளேகள் உள்ளன. என உணர்த்துவ தாலும், "நான் மொழிக் கோசர்" என்ற தொடரில், "நான்", கோசரின் பன்மையை உணர்த்தும் முன் அடை யாக, "மொழி இடைகின்று கோசரின் இயல்பை உணர்த்துவதாகக் கோடல் பொருந்துமேயல்லாது, "நான்' மொழியின் பன்மையை உணர்த்துவதாகக் கோடல் ஒரு சிறிதும் பொருந்தாது என்க. இவ்வாறு கூறுவதால் அக் கல்வெட்டு எழுந்த காலத் இல் கான்மொழிநாடு எனும் பெயர் பெற்றிருந்த நாமக்கல் மலைப்பகுதிகள், கடைச்சங்க காலத்தினும் அப்பெயரே