பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடமும் இயல்பும் 沮7 தமிழ்ப் பாக்களே, கொங்கை வாழிடமாக்கொண்ட கோசர், அதைவிடுத்து வெளியேறியபோது கீழ்க் கடலைச்சார்ந்த செல் லூர்க்கும், தென்கிழக்கின் கண்ணதாகிய மோகூர்க்கும் சென்றதாகவே கூறுகின்றன. ஆக, எவ்வகையான் நோக்கி னும், குடகக் கொங்கர் வேறு, கொங்குநாட்டுக் கோசர் வேறு, என்பதுதான் கிலேகாட்டப் பெறுகிறதேயல்லாது, கொங்கரும் கோசரும் ஒருவராவர். ஆகவே கோசர் முதலில் கொங்கில் வதிந்தவர் என்றும், பின்னர்க் குடகடல் பக் கத்து மலேகாட்டில் குடியேறியவர் என்றும் கொள்வது சிறி தும் ஏற்புடைத்தாகாது என அறிக. கோசரின் வாழிடம் பற்றிய விளக்கம் தரமுனைந்த அதே நூலில், அவர், அன்னரின் இனத் தொடர்பு குறித்தும் சில கூறியுள்ளார். "கோசம் என்பது பெருங்கதைத் தலைவ னை வத்தவர்கோன் உதயணன் இருந்து அரசாண்ட கோசாம்பிக்கு வழங்கும் பெயராகும். தம் வத்ஸ்காடுபஞ்சம் பட்டும் பூகம்பம் எய்தியும் தடுமாறிய காலத்து, இவர் இக் தென்னடு புகுந்தவர் என்று கொள்ளலாம். தென்னட்டில் வாழ்ந்தவர் மரபில் வந்தவர் தலைவனப் பற்றிய நூல் வச் சத் தொள்ளாயிரம், வச்சம் என்பது வக்ஸ் தேசமாகும். இனி, இக் கோசாம்பியை ஆண்ட அரசர் இளன் என்னும் திங்கட்குலத்து வேந்தன் வழியினர் ஆவர். அதுபற்றி அவன் வழிவந்தோர் இளங்கோ எனப் பெயர் சிறப்பர். இனி, இவர் வத்ள தேசத்துக் கோசம் என்ற தலைநகரி லிருந்து வந்தவராதலான் இளங்கோசர் என வழங்கப்பட்ட னர் எனின் அதுவும் பொருந்தும். வத்ள என்ற சொல், ஆரி யத்தில் இளமைக்குப் பெயராதலான், வத்ள கோசர், தமி. ழில் இளங்கோசர் என மொழி பெயர்த்து வழங்கப்பட் டுள்ளனர். கோசரைக் கூறிய பலவிடத்தும் சான்ருே ரெல் லாம் பல்லிளங்கோசர், கல்விளங் கோசர், கொங்கிளங் கோசர் என வழங்கிக் காட்டலான், இஃது உடல் இளமை