பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடமும் இயல்பும் 51 தன் கணவன்மாரை வஞ்சித்தும், தன் பெண்மைக்கு மாசேற்ற முனைந்தும் கேடு சூழ்ந்த கெளரவர் தலைவனேக் கொன்று, அவன் குருதிவிேக் கூந்தல் முடிக்கும் காலும் என் கூந்தல் விரிந்தே கிடக்குமாக என வழங்கிய வஞ்சி னத்தை வாய்ப்பக்கண்ட பாஞ்சாலன் பெற்ற பொற்கொடி கோசர் குலத்தவள் அல்லள் ஆதலாலும், காய்சினம் தணிந்தன்றிக் கணவனேக் கைகூடேன்' என வஞ்சினம் வழங்கி, வழங்கியவாறே, வேந்தன் உயிர்கொண்டும், ஊரை எரியூட்டியும் சினம் தணிந்து, கணவன் வரப்பெற்று வாடைடைந்த, புகார் அளித்த பூங்கொடியாள் பைந்தமிழ் கங்கையல்லது கோசர்குலக் குமரி அல்லள் ஆதலாலும், காஷ்மீர நாட்டவர், கோசமுறை என்ற வஞ்சினம் வழங் கும் வழக்கமுடையவராவர். தங்தையின் கண்கவின் அழித் தார்க்குக் கேடுகுழா முன், கலத்தும் உண்ணேன் வாலிதும் உடேன் என வஞ்சினம் உரைத்து, அவ்வாறே வாழ்ந்து வெற்றிகண்ட கோசர் குலக் கன்னியாம் அன்னி மிஞிலி பால், அக்கோசமுறைச் சூள்உரை இடம் பெற்றுள்ளது: ஆகவே, கோசர், அக்காஷ்மீர நாட்டவர் எனல் பொருங் தாது. - புணர்ச்சியும் பழகுதலும் அற்ற நட்புடையராகவும்: செல்வக்காலே நிற்பினும் அல்லற்கால கில்லலன் வரு, வன்' என்று கூறிய கோப்பெருஞ் சோழன் உரை பொய்யா வாறு வந்து, அவைேடு வடக்கிருந்து, உயர்ந்த நட்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கிய பிசிராங்தையார் கோசர் அல்லர். ஆதலின், கோசர்பால் காணலாகும் சிறந்த பண்புகளுள் ஒன்ருகப் பழந்தமிழ்ப் பாக்கள் கூறும், நன்றல் காலையும் நட்பிற்கோடாமை, வக்ஸ் நாட்டுக் கோசம்பி ஆண்ட வத்தவர் கோனம் உதயணன் சிறைப் பட்டாகை, கெட்டகாலத்து விட்டனன் என்னது நட் டோன் என்பது நாட்டிய யூகிபால் காணலாம் நட்புடை