பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தமிழகத்தில் கோசர் வரலாறு இனிது உரைக்கப்பட்டுள்ளது. போரில் பெற்ற வாள்வடுவால் வனப்புற்ற முகத்தினராய் முதுகோசர் கிய மத்தில் வாழ்ந்திருக்க, அவர் குலத்து இளைஞர்கள், செல் லூர்க்கு அணித்தாகச் சென்று, கடல் நீரில் புகுந்தாடி மகி ழும் கன்னி மகளிர் பறித்துப் போட்டிருக்கும் புலி நகக் கொன்றை மலரையும். கழனியில் புகுந்து களேபறிக்கும் உழத்தியர் களையோடு களையாகக் களைந்து எறிந்த குவளே மலர்களையும், செல்லூர் அரணேச் சூழ வந்திருக்கும் காவற் காட்டுள் புகுந்து தாம் பறித்து வந்த முல்லே மலர்களோடு கலந்து, கண்ணி கட்டிச் குடி மகிழ்வர் எனப் புலவர்கள் கூறியிருப்பது காண்க. - கோசரைத் தன் படை வீரராகப் பணிகொண்ட பாண் டியன் நெடுஞ்செழியனேப் பாடிய புலவர் மாங்குடி கிழார். கோசர், எழினி ஆதன் என்பானுக்கு உரியதும், சோனட் டுக் இழ்க்கரைக்கண் உள்ளதும் ஆகிய வளம் மிக்க வாட் டாற்றில், மலர் இட்டு மணம் ஊட்டப் பெற்ற மதுவுண் டும், மங்கையரோடு குரவை ஆடியும் மகிழ்ந்திருப்பர் என்று கூறியுள்ளார்.” - 1. அருந்திறல் கட்வுள் செல்லூர்க் குளுஅது பெருங்கடல் முழக்கிற்ருகி, யாணர் இரும்பு இடம்படுத்த வடுவுடை முகத்தர் கடுங்கண் கோசர் நியமம்.’’ - 'கடலாடு மகளிர் கொய்த ஞாழலும் கழனி உழவர் குற்ற குவளையும் கடிமிளைப் புறவில் பூத்த முல்லையொடு பல்இளங்கோசர் கண்ணி அயரும் - மல்லல் யாணர் செல்லி. -அகம் : 90, 215 2. நனக் கள்ளின் மனக்கோசர் - தீந்தேறல் நறவு மகிழ்ந்து தீங்குரவைக் கொளேத் தாங்குந்து... வளநீர் வாட்டாறு. -புறம் : 396,