பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கோசரும் கொண்காணத்து நன்னனும் வள்ளல் பலரை ஈன்றளித்த வளமார் புகழ் மிக்க வேளிர் குலத்தவர், தம் விழுநிதிகளே வைத்துக் காக்கவல்ல காவல்மிக்க பாழி முதலாம் பேரூர்களையும், ஏழில் முதலாம் எழில்மிக்க மலைகளையும் தன்னகத்தே கொண்டு, பொன்பட பாறைகள் மலிந்த கொண்கான காட்டை ஆண்டு கொண். டிருந்தான் ன் ன ன் வேண்மான் என்ற வேளிர்குலத் தலைவன். இயல்தேர் நன்னன்' 'பொலந்தேர் கன்னன் எனப் பாராட்டத்தக்க தேர்ப்படையும், குழியானேச் சுடர்ப்பூண் நன்னன்', 'கறையடி யானே நன்னன்' எனப். பாராட்டத்தக்க யானப்படையும். ஏந்துவேல் நன்னன், வென்வேல் நன்னன்' எனப் பாராட்டத்தக்க வேற்படை யும் பெற்று, வீறு கொண்டிருந்த நன்னன், தன் காட்டிற்கு அணித்தாக, ஆற்றல் மிக்கார் யாரும் அரசோச்சி யிருத்தல். கூடாது என எண்ணினன். அவ்வெண்ணத்திற்கு இடை யூறு விளேக்கும் வகையில் வாழத் தொடங்கினுன் பிண்டன் எனும் பெருவீரன். பொன்னேற்றிச் செல்லும் பெரிய கலங்களேயும் கவிழ்க்கவல்ல சுரு மீன்போல், பேரரசுகளே யும் பாழாக்கவல்ல பெருவலி படைத்த அப் பிண்டன், தனக்கு அணித்தாக இருப்பது தன் அழிவிற்கு ஆக்கமாம் என்று எண்ணிய நன்னன், தன் நாற்படைத் துணையால் அவனே வென்று அழித்து விட்டான். அவ் வெற்றியால்

  • M -