பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்தில் கோசர்கள் 'தமிழ் இனத்தார் என, இங்காளிலே நம் முடைய நாட்டகத்தே வாழ்வோர் பலரும், பண்டி லிருந்து இன்றுவரை ஒரே இனத்தவராகவே அமைந்திருந்தவர்தாமா ? இந்தக் கேள்வி தமிழ் இலக்கியத்தினைக் கற்பவர் பலருக்கும் எழுவது இயல்பேயாகும். இதற்குத் தெளிவான விடை சொல்லுவது மிகவும் கடினம் என்பது அனே வரும் அறிந்ததொன்று. இந்த ஐயத்தைப் போக்குவதற்குப் புலவர் கா. கோவிந்தன் அவர்கள், முதற் கண், தமிழகத்தே வாழ்ந்திருந்து, கால்த்தால் தமிழரேயாகிக் கலந்து விட்ட மறக்குலத்தவரான கோசர்களைப் பற்றிய பற்பல செய்திகளையும் ஆராய்ந்து, இந்நூலினை அமைத்திருக்கின்ருர். தமிழக வரலாறு மிகத் தெளிவாகவும் ஆதாரங்களுடன் மு ற் ற வு ம் அமைவதற்கு இயலாததாகவே இருக்கின்றது. ஆங்காங்கு இலக் கியங்களுள் காணும் சிலபல வரலாற்றுச் செய்தி களைக் கொண்டே வரலாற்றை இயைபுபடுத்தி உருவாக்க வேண்டியதிருக்கிறது. இத்தகைய பணியிலுள்ள சிரமங்கள், இதனே அறிந்தவர்களா லேயே முற்றவும் உணரப்படும். இந்நூலின்கண், புலவர் கோவிந்தனர், பற் பல செய்திகளேயும், தம்முடைய பரந்த அறிவுச் செழுமையினக் கொண்டு ஆராய்ந்து, முடிவுகளே .யும் தருகின்ருர், அவற்றை அவ்வாறே பிறரும்