பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசரும் கொண்கானத்து நன்னனும் 69; அதைத் தன் படைவலி கொண்டே செய்திருப்பன். இது போலும் சூழ்ச்சி நெறிசென்று, இழிவுடையணுகி விடான். மேலும், மடப்பிடிப் பரிசில் பிறிதொன்று குறித்தது'எனக் கூறும் அக்குறுக்தொகைச் செய்யுட்கண், "அகுதை தங்த” என்ற பாடத்திற்குப் பதிலாக, "அகுதை பின்றை" என்ற பாடமே ஏடுகள் பலவற்றிலும் இடம் பெற்றுளது. ஆக, இத்தடைகளேயெல்லாம் ஒருங்கு நிறுத்தி ஊன்றி நோக்கு வார்க்கு, நன்னன் நறுமா கொன்ற நிகழ்ச்சியை, அகுதை தங்த மடப்பிடிப் பரிசிலோடு தொடர்புபடுத்திக் கூறுவது, கதைகட்ட வல்லார் கட்டிவிட்ட கதையேயல்லாமல், வர லாற்றுண்மை வாய்க்கப் பெற்றதன்று என்பது உறுதி யாகும்.