பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 g தமிழகத்தில் கோசர் விட்டபடியால், அம்முது கோசர், ஆனிரைப் பெரியாரின் தகுதியினத் தம் மனத்தினிடைக் கருதினரல்லர். அவர் கண்முன், ஆக்கள் புகுந்து அழித்துவிட்ட விளைபுலமே காட்சி அளித்தமையால், அப்பெரியவர். அத்தகைய கொடிய வரல்லரே; அவர் அச்செயலை வேண்டுமென்றே செய்திருக்க மாட்டாரே; அவர் கட்டுக்கும் அடங்காத கிலேயிலேயே அவ்வானிரை விளைபுலத்தில் புகுந்திருக்கும்; ஆகவே அவர் மீது குற்றம் இல்லை; அதற்காக அவரைத் துன்புறுத்துவது கூடாது; வேண்டுமாயின் அவ்வானிரைகளே கையப் புடைக் கலாம் என்று கிரலே கினைந்து முடிவுகாணத்தக்க கிலேயினே, அவர்கள் இழந்துவிட்டார்கள். அதை இழந்துவிடவே, ஆனிரை குற்றம் புரியவும், குற்றம் அப்பெரியவரதே; அதிலும், தம்ஆனிரை, பிறர் புலத்துட் புகுந்து மேய்வதைப் பார்த்திருந்த அவர் கண்களுடையதே என்று கருதிவிட்டார் கள்; அக் கருத்து அவர் உள்ளத்தில் உருப்பெறவே, அவர் கள் அப்பெரியவரை வளைத்து வீழ்த்தி, அவர் கண்களைப் போக்கிக் குருடாக்கிவிட்டார்கள், . தாம் செய்யாத பிழைக்குத் தம் கண்களைப் பறி கொடுத்த அப்பெரியவர், நோய் பொறுக்க மாட்டாது கோவென அழுது புலம்புவாராயினர்; அச்செய்தி அவர் ஊருட்சென்று பரவிற்று; அது கேட்டாள் அவர் மகள் அன்னிமிஞிலி எனும் அழகுத் திருப்பெய்ருடையாளாய அவ் விளமகள், தன் தங்தைக்கு நேர்ந்த துயர்கண்டு துடித்தாள்: துவண்டாள்; வாழ்க்கை அறம் பிறழாது வாழவல்ல வாய் மையுடையவராகிய தன் தங்தைக்குக் கேடு விளேத்த கோசர் பால் கடுங்கோபம் கொண்டாள். ஆனால், அக்கோசரோ கொற்றம் மிக்கவர். எங்கே செல்லினும் இணைபிரியாது செல்லும் இயல்பு வாய்ந்த ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்; அவர்தம் ஆற்றல் கண்டு, அரச வாழ்வில் மிதக்கும் ஆடவர் களே அஞ்சி நடுங்கினர் என்ருல், அத்தகையாளரைப்