பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசரும் மேர்கர்ப் பழையனும் 79 மிக்கு கிற்கும் அக் கோசர் படையையே முதற்கண் வெற்றி, கொள்ளுதல் வேண்டும்; அப் படையை அழிக்காமல் நெடுஞ்செழியனே அணுகுவது இயலாது; ஆல்ை, அக் கோசர் படையை எதிர்த்துப் போரிடுவது, தம்முள் எல் லார்க்கும் இயலாது. வெள்ளம்போல் பரந்த பெரும் படையும், கணிமிகச் சேய பகைநாடுகளுக் கெல்லாம் சென்று.போரிட்டு வென்ற போர்ப்பயிற்சியும், காற்றெனக் கடுகிப் பாயவல்ல குதிரைப் படையும், கணக்கற்ற களிற் றுப் படையும் உடையார் மட்டுமே, அப் படைமுன் செல் லுதல் இயலும் என உணர்ந்து, தம் எழுவருள், அத்தகுதி முற்றவும் வாய்க்கப் பெற்றவன் கிள்ளிவளவன் ஒருவன் மட்டுமே எனத் தேர்ந்து, கோசரோடு போரிடும் பணியின, அவன்பால் ஒப்படைத்தனர். கோசரோடு போரிடும் பெருவாய்ப்புத் த னக் கு க் கிடைத்ததே என்ற மகிழ்ச்சியால், கிள்ளியும், தன் காற். படையைக் கோசரின் அணிமீது ஏவினன். வங்திருந்த பகை வர் படை ஏழினுள்ளும் அளவாலும் ஆற்றலாலும் பெரி யது கிள்ளியின் படை அப் டடையோடு போரிடுவதே தம் பேராண்மைக்குப் பெருமையாகும்; அவ் வாய்ப்பின. அளிக்க மாட்டானே பாண்டி மன்னன் என எண்ணியிருக் கும் நிலையில், வெள்ளம்போல் பரந்த கிள்ளிப்படை, தம் படை வரிசை நோக்கி வருவது கண்டு மகிழ்ந்தார்கள், கோச வீரர்களும். அது, தனக்குக் கிடைத்த பெறற்கரிய பேறு எனக்கருதி பெருமிதம் கொண்டான் பழையன். உள்ளத்தில் அவ்வுணர்வு மிகவே, கோசர் உரம் மிகுந்து போராடினர்; அதனல், போராடத் தொடங்கிய சிறி து பொழுதிற்கெல்லாம் சோளுட்டுப் படையை வென்று துரத்தி விட்டார்கள் கோசர். கோசர் படையைக்கொன்று, நெடுஞ்செழியன் காட்டை அகப்படுத்திக் கொள்ளலாம் என்ற நினைவோடு வந்த கிள்ளி, தன் நாற்படையை நான்