பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தமிழகத்தில் கோசர் தன் தலைமைக்கீழ்ப் பணிபுரிந்த கோசர் படையைக் கூடல்மா கேரத்திலேயே விடுத்து, தனக்கு உதவவல்ல ஒரு சிறு படையை மட்டும் உடன் கொண்டு, மோகூர் மன்ன ய்ை, மோகூர் சென்று வாழத்தொடங்கிய பழையன் மாறன், தனக்கு அத்துணேப் பெருவாழ்வு அளித்த பாண். டியப் பேரரசின்பால் கொண்ட அன்பு மிகுதியால், அப் பாண்டியர் குலத்திற்கு உரிய மலர்மாலே அளிக்கும் வேம்பு மரத்தை, அவர்தம் நினைவுச் சின்னமாய் வைத்து வளர்த்து அதையே தன் காவல்மரமாகவும் கொண்டு வாழ்ந்திருக் தான். தன் வேந்தர்க்குரிய வேம்பையே தனக்குரிய காவல் மரமாகவும் கொண்டு வளர்த்த பழையன் பெருமையைப் புலவர்கள் பாட்டிடை அமைத்துப் பரவுவாராயினர். அக் தகைய பாராட்டுரைகளுள், "பழையன் காக்கும் கருஞ் இன வேம்பின் முழாஅரை முழுமுதல்", "பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு வேம்பு’ என்ற, இத் தொடர் களும் இடம்பெறும். - பாண்டியர் தலைநகர்க்குச் சோழவேந்தன் ஒருவனுல் வரவிருந்த கேட்டினேப் போக்கிக் காத்த பெரும்புகழோடு, மோகூரில் பெருவாழ்வு வாழ்ந்திருந்த பழையன் மாறனுக்கு, வடநாட்டுப் பேரரசன் படைகளால் தமிழகத்திற்கு வர விருந்த பெருங் கேட்டைத் தகர்த்துக் காக்கும் ஒருபெரும் புகழும் அம் மோகூரில் காத்துக் கிடந்தது. ; வடகாட்டுப் பேரரசுகளுள் மெளரியப் பேரரசும் ஒன்று. இமயம் முதல் வேங்கடம் வரையில் பரவிய பெரு காட்டில் அதன் அரச ஆணை சென்று கொண்டிருந்தது. அப்பேரரசின் வழிவந்த ஒரு வேந்தனுக்குக் தங்கள் ஆட்சிக்கு அடிப்ணியர்தே தனியரசு நடாத்தி விரும் தமிழ் கத்தை வென்று அடிப்படுத்தியபெருமைக்கு உரியோளுகக் தன்ன. ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்ற பெரு