பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசரும் ம்ோகூர்ப் பழையனும் & முறையும் ஆகாது என்ற போர் நெறியை வடுகர் எடுத்துக் கூறவ்ே, வடவர் படை விரைந்து சென்று மோகூர்க்கோட் டையை வளைத்துக் கொண்டது. தமிழகத்தில் தன்னை எதிர்ப்பவர் எவரும் இலர்: ஆகவே தன்பால் பெரும்படை இருக்க வேண்டுவதில்லே என்ற துணிவால், சிறிய படையொன்று பணிபுரிய மோகூரில் வாழ்ந்திருந்த(ப்ழையன் மாறன் வடவர் முற் றுகை அறிந்து, அஞ்சாத அவனும் அஞ்சிவிட்டான். ஆயி லும், அவன் போர்ப்பயிற்சி அவனுக்குத் துணைபுரிந்தது. இடவர் வருகையைக் தன் பேரரசனுக்கு அறிவித்து விட் ட்ால்) மதுரை மாாககளிலிருந்து தன் கோசப் பெரும்படை வந்துவிடும்; அது. இவ்வடவர் பெரும் படையை ஒரு காட் போரிலேயே வென்று ஒட்டிவிடும்; ஆகவே, அரசனுக்குச் செய்தி போக்கிவிட்டு, உள்ள சிறுபடைத் துணையால், அர னிற்குக் கேடுவரா வண்ணம்.காத்துக் கொண்டு அரண கத்தே அடங்கியிருக்க வேண்டும் எனத் துணிந்தான். உடனே செய்ய வேண்டு வெனவற்றை விரைந்து செய்து முடித்தான். கோட்டைவாயிற் கதவுகளைக் கணயம் இட் டுச் செறித்துக் காவலுக்கு ஆங்காங்கே சிற்சில வீரர்க்கள் நிறுத்திவிட்டு, பாண்டி நாட்டிலிருந்து வரும் பெரும் படையை எதிர் நோக்கி அரணகத்திலேயே அடங்கியிருக் தான். - । ५ - . . . . . . மோகூர் அரனே அழித்து விடலாம்; அல்லது. மோகூரை முற்றியிருந்து, பழிையனே வெற்றி கொள்ளலாம் என்ற வடவர் வேட்கை விஞயிற்று; வடவெல்லக் காவல் நிலையமாய் விளங்கும் தன் மோகூர் அரனுக்கு இது போலும் முற்றுகை உண்டாவது இயல்பாம் என்ற மூதறிவு வாய்க்கப் பெற்றிருந்தவளுதலின், பழையன் அம்முற்றுகை பயனற்றுப்போகுமாறு அரணகத்தார்க்குப் பொருட், குறைபாடு நேராவகையில் வாழ்க்கைக்கு வேண்டும் வகை