பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழகத்தில் கோசர் வகையான பொருள்களே வேண்டுமளவு குவித்து வைத் திருந்தான். அதனல், அரனேவிட்டு வெளிவரவேண்டுவது அவனுக்குத் தேவையற்றதாகி விட்டது. ஆல்ை, இவ்வுண் மையறியாத வடவர்படை என்றேனும் ஒருநாள் பழை யன், பொருள் வேண்டி வெளிப்படுதல் வேண்டும்; ஆகவே அழிக்கலாகா அரண்அழிவில் படைகளை வீணே பாழ்படுத்தி விடாமல், மோகூர் முற்றுகையைக் தொடர்ந்து மேற் கொள்வோமாக என்று கருதிக் காத்துக்கிடந்தது. ஈண்டைய கிலே இதுவாக, (மோகூர் முற்றுகைச் செய்தியை அறிந்தான். பாண்டியின் நெடுஞ்செழியன். படைத்தலைவன் பழையன் மாறனுக்கு வரும் கேடு, உண் மையில் தன் கேடே என்றும், மோகூர் அரணின் அழிவு, பாண்டி நாட்டின் அழிவேயாம் என்றும் அறிந்தான். அத ல்ை அச்செய்தி கேட்ட அக்கணமே, துணைப்படை அனுப் பத் துடித்தது அவன் உள்ளம். தமிழகத்தின் பெருவேங் தனகிய அவன், படையெடுத்து வந்திருக்கும் வடவர் படை .யின் பெருமை பேராற்றல்களைப் பலர் கூறக் கேட்டறிந்தி ருந்தான். அதல்ை மோகூர்க் களத்திற்குப் போகும் படை அவ்வடவர் படையினும் மிஞ்சிய் ஆற்றல் வாய்ந்ததாதல் வேண்டும் என்று கருதினன். அவன் கருத்து அதுவாகவே, களம்பல கண்டு, வெற்றி பல பெற்ற விழுச்சிறப்பு வாய்ந்த தும், தொலைகாடு கடந்து, மோகூரை மிகமிகக் குறுகிய காலத்தே அடையுமாறு காற்றெனக் கடுகி விரைய வல் லதும், காடும், மலேயும் காட்டாறுமாகிய கொடு வழியைக் கடக்கும் நிலையிலும், பகைவரின் அரிய படைக்கலங்கள் வந்து தாக்கும் நிலையிலும், பாழுற்றுப் போகாத் திண்மை வாய்ந்ததுமாகிய தேர்ப்படையும், அதைப்போலவே அனைத்து வகையாலும் சிறப்பு வாய்ந்த களிற்றுப்படை குதிரைப்படைகளும் வடவர் படையை எதிர்க்க வரிசை வரி சையாக அணிவகுத்து நின்றன. முப்பெரும் படைகளே